நைட் ஷிஃப்ட்ல வேலை பாக்குறீங்களா? முதல்ல இதைப் படிங்க!! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

நைட் ஷிஃப்ட்ல வேலை பாக்குறீங்களா? முதல்ல இதைப் படிங்க!!

நைட் ஷிஃப்ட்ல வேலை பாக்குறீங்களா? முதல்ல இதைப் படிங்க!!


இரவில் இடைவிடாது பணி புரிபவர்களுக்கு எளிதில் ஹார்ட் அட்டாக் மற்றும் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நைட் ஷிஃப்ட்டுகளில் வேலைப் பார்ப்பவர்களுக்கு உடற்பருமன், சர்க்கரை நோய் எளிதில் தாக்குகிறது. 

இதனால் அவர்களுக்கு ஹார்ட் அட்டாக்கும், கேன்சரும் எளிதில் உண்டாகும் அபாயம் இருக்கிறது என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுப் பிடித்துள்ளனர். இந்தக் குழுவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு ஆராய்ச்சியாளரும் உள்ளார். 

வாஷிங்டன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். மொத்த உடலின் பகல் இரவு சுழற்சியை மூளையிலுள்ள கடிகாரம் தான் இயக்குகிறது. ஆனால் கல்லீரல், குடல் மற்றும் கணையத்தில் தனி கடிகாரங்கள் உள்ளன. 

அவற்றின் எண்ணங்களைப் பொறுத்தே உறுப்புகள் செயல் படுகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 'இரவு நேரங்களில் வேலை செய்பவர்களின் உயிரியல் அமைப்பு மாறிப் போகிறது. அதனால் இது இரவு என சில சிக்னல்கள் சொல்ல, இல்லை இது பகல் என வேறு சில சிக்னல்கள் சொல்கிறது. 

இதனால் மொத்த உடலும் குழம்பிப் போய், அவற்றின் வளர்ச்சிதை மாற்றங்களும் பாதிக்கின்றன' என இதற்கான காரணத்தையும் சொல்லியிருக்கிறார்கள் ஆய்வாளர்கள். 14 ஆரோக்கியமான தன்னார்வளர்களின் ரத்தத்தைப் பரிசோதித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டிருக்கிறது.


Night Shift Work? Read it first !!


US researchers have found that those who work non-stop at night are more likely to have heart attacks and cancer. Obesity and diabetes can easily strike people who work night shifts. US researchers have found that they are at greater risk for heart attacks and cancer. The group also includes a researcher of Indian origin. Researchers from Washington State University carried out the study.

The clock in the brain just drives the day and night cycle of the entire body. But there are separate clocks in the liver, intestines and pancreas. Researchers have suggested that the organs act on their thoughts. 'The biological structure of those who work at night is changing. So it doesn't say some signals as night, it tells some other signals as day. This causes the whole body to collapse and their growth changes. ' The study was conducted to test the blood of 14 healthy volunteers.

No comments:

Post a Comment

Please Comment