"நீங்க கேட்டா மட்டும் போதும்" கூகிளின் புதிய வசதி.. உங்கள் போனில் இந்த வசதியை இயக்குவது எப்படி? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

"நீங்க கேட்டா மட்டும் போதும்" கூகிளின் புதிய வசதி.. உங்கள் போனில் இந்த வசதியை இயக்குவது எப்படி?

"நீங்க கேட்டா மட்டும் போதும்" கூகிளின் புதிய வசதி.. உங்கள் போனில் இந்த வசதியை இயக்குவது எப்படி?


நீண்ட வாசிப்புகளைப் படிப்பதில் நீங்கள் சோர்வடைந்து, பாட்காஸ்ட்களை விரும்பினால், கூகிள் அசிஸ்டன்டின் “இதைப் படி” (Read It) அம்சம் இப்போது உங்களுக்கு உதவ வந்துள்ளது. நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது எல்லாம் வெறும் நான்கே நான்கு வார்த்தைகள் தான்.

“கூகிள் அசிஸ்டன்ட், இதைப் படி” (“Google Assistant, Read It”) எனும் நான்கு சொற்கள் தான். “இதைப் படி” எனும் அம்சம் இந்த மார்ச் மாதத்திலிருந்து வெளிவருகிறது, மேலும் கூகிள் அசிஸ்டன்ட் உதவியுடன் நீண்ட வலைப்பக்கங்களைக் கேட்க இது உதவும் என்று கூகிள் கூறுகிறது. 

மேலும் தெளிவாக கூறவேண்டுமானால், இந்த 2000 வார்த்தைக் கொண்ட வலைப்பக்கத்தைப் படி என்று கூகிள் அசிஸ்டன்டுக்கு நீங்கள் கட்டளையிட்டால், நீங்கள் ஜாகிங் செய்யும்போதும் கூட, அது உங்களுக்காக அதை படித்துக்காட்டும். 

ஒரு வலைப்பக்கத்தில் ஒரு குறிப்பிட்ட மொழி புரியாத நபர்களுக்கும் அல்லது பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கும் இந்த அம்சம் பெரிய வரப்பிரசாதமாக வருகிறது. கூகிள் அசிஸ்டன்ட் உள்ளடக்கத்தை 42 மொழிகளில் மொழிபெயர்க்க முடியும், அவற்றில் 11 இந்திய மொழிகளாக இருக்கும். 

இருப்பினும், தற்போது, "இதைப் படி" அம்சம் ஆங்கிலத்துடன் மட்டுமே இயங்குகிறது. அம்சத்தில் பிற மொழிகளுக்கான ஆதரவு விரைவில் இயக்கப்படும். கூகிள் இந்த அம்சத்தைப் பற்றிய ஒரு முன்னோட்டத்தை ஜனவரி மாதம் நுகர்வோர் மின்னணு கண்காட்சியில் (CES) வெளியிட்டது.

இந்த அம்சம் வைஃபை மற்றும் இணையத் தரவைத் தவிர 2 ஜி தரவிலும் செயல்படும் என்று கூகிள் தெரிவித்துள்ளது. மொழிபெயர்ப்பு அம்சம் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியில் பக்கத்தை மொழிபெயர்க்க உதவும். 

நிறுவனம் இயற்கை மொழி செயலாக்கம் மற்றும் பேச்சு தொகுப்பு AI போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. ஆன்ட்ராய்டு தொலைபேசிகளில் இந்த அம்சத்தை நீங்கள் எவ்வாறு இயக்கலாம் என்பது இங்கே பார்ப்போம் – உங்களிடம் ஏற்கனவே இல்லையென்றால், Google Assisstant செயலியை Play Store இலிருந்து பதிவிறக்கவும்.

– குறிப்பிட்ட பக்கத்தைப் படிக்க Google க்கு நீங்கள் அறிவுறுத்தும்போது, ​​கூகிள் அசிஸ்டன்ட் அதைப் படிக்கத் தொடங்கும். 

– இது உரையை முன்னிலைப்படுத்தும் மற்றும் உரையை வாசிக்கும் போது பக்கத்தை தானாக ஸ்கிரோல் செய்யும். உரையில் நீங்கள் எவ்வளவு தூரம் வந்தீர்கள் என்பதை நினைவில் கொள்ள இது உதவும். 

– நீங்கள் வாசிப்பு வேகத்தையும் கட்டுப்படுத்தலாம். எனவே, அசிஸ்டன்ட் உங்களுக்காக ஒரு செய்முறையைப் படிக்கின்றது என்றால், நீங்கள் எல்லா படிகளையும் பின்பற்றுவதற்கு மெதுவாக வாசிக்கும்படி அதை மாற்றலாம். 

– எந்தவொரு வெப் மேனேஜர் அல்லது வெப்சைட் ஓனரும் கூகிள் அசிஸ்டன்ட் ஒரு பக்கத்தை சத்தமாக படிப்பதை விரும்பவில்லை என்றால், கூகிள் “பக்கத்தை உரக்கப் படிக்க வேண்டாம்” (no page read aloud) என்ற HTML மெட்டா குறிச்சொல்லை உருவாக்கியுள்ளது, 

இது உரையை பக்கம் பக்கமாக முடக்கும். இந்த அம்சத்தில் உள்ள ஒரே சிக்கல் என்னவென்றால். கூகிள் அசிஸ்டன்ட் எழுத்துப்பிழைகளைத் திருத்தி அவற்றைப் படிக்காது. இருப்பினும், கூகிள் அசிஸ்டன்ட் லிங்க்ஸ், பட்டன் மற்றும் மெனுக்கள், போன்றவற்றை தானாகவே ஸ்கிப் செய்துவிட்டு படிக்கும்.

"Did you just ask" Google's new feature .. How to enable this feature on your phone?


If you're tired of reading longer reads and want podcasts, Google Assistant's "Read It" feature is now available to help you. All you need to remember is just four words. Four words are "Google Assistant, Read It". The “Read it” feature is coming out this March, and Google says it will help you listen to longer web pages with the help of Google Assistant. To be clear, if you command Google Assistant to read this 2000 word web page, it will read it for you, even when you are jogging.

This feature is a great gift for people who do not understand a particular language on a web page or for the visually impaired. Google Assistant can translate content into 42 languages, 11 of which will be Indian languages. Currently, however, the "read this" feature only works with English. Support for other languages ​​in the feature will be enabled soon. Google released a preview of this feature at the Consumer Electronics Fair (CES) in January. Google said the feature will work on 2G data, besides Wi-Fi and internet data. The translation feature enables users to translate the page into their preferred language.

The company employs technologies such as natural language processing and speech synthesis AI. Here's how you can enable this feature on Android phones 

- if you don't already have one, download the Google Assisstant processor from the Play Store. 

- When you instruct Google to read a particular page, Google Assistant will start reading it. 

- This will highlight the text and automatically scroll the page while reading the text. This will help you remember how far you have come in the speech. 

- You can also control reading speed. So, if the assistant is reading a recipe for you, you can turn it into a slow read to follow all the steps.

- If any web manager or website owner does not want Google Assistant to read a page aloud, Google has created an HTML meta tag called "No page read aloud", which disables the text on the page. The only problem with this feature is that. Google Assistant will not edit the spelling and read them. However, Google Assistant links, buttons and menus are automatically read and skipped.

No comments:

Post a Comment

Please Comment