அரசு துவக்கப் பள்ளிக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கிய கிராம மக்கள்..! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அரசு துவக்கப் பள்ளிக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கிய கிராம மக்கள்..!

அரசு துவக்கப் பள்ளிக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கிய கிராம மக்கள்..!


கன்னியாகுமரி மாவட்டம் தொள்ளந்தி அருகே அரசு துவக்கப் பள்ளிக்கு சுமார் 2,00,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பொதுமக்கள் சீர்வரிசையாக வழங்கினர். கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செஞ்சி அருகே உடைஅடியில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று உள்ளது. 

இந்த பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான உபகரணங்கள் குறைந்த அளவில் இருந்ததால் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து அரசு பள்ளிக்கு தேவையான பொருட்களை கொடுக்க முடிவு செய்தனர்.

இதனால் சுமார் 2,00,000 ரூபாய் மதிப்புள்ள மேஜை, நாற்காலி, பென்ச், ஒலிபெருக்கிகள், தொலைக்காட்சிப்பெட்டி போன்ற ஏராளமான பொருள்களை மேளதாளங்கள் முழங்க பெண்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஊர்வலமாக வந்து பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



Villages donated to the government primary school


Nearly Rs. 200,000 worth of goods were donated by the public to the Government Primary School near Tholandi in Kanyakumari District. Kanniyakumari District There is a Government Elementary School under the Thovai Panchayat Union at Chenadi, near Kadi. The students of this village had little equipment and the villagers of the village decided to volunteer and provide the necessary school supplies.A large number of items, such as a table, chair, bench, loudspeaker, television box, etc., were valued at around Rs. This incident caused resentment among the people of the area.

No comments:

Post a Comment

Please Comment