கைகுத்தல் அரிசின்னா என்னன்னு தெரியுமா? ஏதற்க்கெல்லாம் நன்மை?
கிராமப்புறங்களில் சில ஆண்டுகளுக்கு முன் விவசாயிகள் தங்களது வயலில் விளைந்த நெல்லை பெரியா அண்டாக்களில் அவித்து உலர வைப்பர். அவித்து உலர வைத்த இரண்டு அல்லது மூன்று மூடை நெல்லை மாட்டுவண்டி அல்லது சைக்கிளில் ரைஸ்மில்லுக்கு கொண்டு சென்று அரிசியாக்கி வந்தனர். ஆனால் தற்போது பெரும்பாலான கிராமங்களில் நெல் அவிக்கும் முறை இல்லை.
சரி இந்த கைக்குத்தல் அறியால் என்னென்ன நன்மைகள்ன்னு பார்ப்போம்…
அரிசி உணவானது நமது உடலுக்குத் தேவையான ரிபோஃபிளேவின், பி காம்ளெக்ஸ் மற்றும் இதர விட்டமின்கள் போன்ற ஆரோக்கியமான சத்துக்களை தரக் கூடியது.
கைகுத்தல் அரிசியில் விட்டமின் B, B12, A, E, K, பாஸ்பரஸ், நார்ச்சத்து, மாவுச்சத்து, புரதச்சத்து, செலினியம், மாங்கனீசு, இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
மேலும் தினமும் கைக்குத்தல் அரிசியை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
தினமும் கைக்குத்தல் அரிசியை சாப்பிடுவதால் அதில் செலினியம் உள்ளதால் பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயை ஆரம்பத்திலேயே தடுக்ககூடிய தன்மை உள்ளது.
கைக்குத்தல் அரிசில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ட்ஸ் லிக்னான் மார்பக புற்றுநோய் மற்றும் இதய நோய் இரண்டையும் காத்துக் கொள்ள உதவுகிறது.
கைக்குத்தல் அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதனால் மிகவிரைவில் செரிமாணம் அடைய உதவுகிறது. மேலும் தினமும் கைக்குத்தல் அரிசி சோறு சாப்பிட்டால் இதய நோயில் இருந்து தப்பிக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
கைக்குத்தல் அரிசியில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால், இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. அது மட்டும் இல்லாமல் இரண்டு வகை நீரிழிவு நோயை சீராக காத்துக்கொள்ள கைக்குத்தல் அரிசி பயனுள்ளதாக இருக்கிறது.
பல ஆராய்ச்சியின் மூலம் தினமும் கைக்குத்தல் அரிசி சாப்பிட்டால் ஆஸ்துமா நோயை குறைக்கிறது என்று கண்டுப்பிக்கப்பட்டுள்ளது.
கைக்குத்தல் போன்ற கரையாத நார்ச்சத்துக்கள் உள்ள உணவுகளை தினமும் சாப்பிட்டால் பெண்களுக்கு பித்தக்கற்கள் உருவாகுவதை தடுக்க உதவுகிறது.
கைக்குத்தல் அரிசியில் அதிகம் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் சாப்பிட்ட பிறகு, மிக விரைவில் உணவு செரிக்க உதவுகிறது. இதனால் மலச்சிக்கலை தடுத்து குடல் ஆரோக்கியத்தை காத்துக் கொள்ள உதவியாக இருக்கிறது.
கைக்குத்தல் அரிசியில் 21% மெக்னீசியம் உள்ளதால் தினமும் ஒரு கிண்ணம் கைக்குத்தல் அரிசிச்சோறு சாப்பிடுவதால் நம் எலும்புகள் மிகவும் பலமாக நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது.
கைக்குத்தல் அரிசியில் இருக்கும் தவுட்டில் கிடைக்கும் எண்ணெய் உடலில் உள்ள கொழுப்பை குறைத்து உடலை மெலிதாக காட்டுகிறது.
கைக்குத்தல் அரிசியில் மாங்கனீசு நிறைந்துள்ளது அதனால் இதை உட்கொள்ளும் போது இவற்றில் உள்ள ஊட்டச்சத்துகள் கொழுப்பு அமிலத்தை உருவாக்கி நம் நரம்பு மண்டலத்தில் பல வகையான நரம்புகளில் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது
Do you know what it is? What are the benefits?
In the rural areas, some years ago, farmers used to grow rice paddy in their fields. Two or three bundles of dried rice were brought to the rice mill on a bicycle or bicycle. But nowadays most of the villages do not have rice fields. Well, let's see what the benefits of handcuffing are…
Rice food can provide healthy nutrients such as riboflavin, B-complex and other vitamins that our body needs. Rice is rich in vitamin B, B12, A, E, K, phosphorus, fiber, starch, protein, selenium, manganese, iron, lime, potassium, magnesium. Learn about the benefits of eating rice every day.
Eating rice daily has selenium in it that prevents colon cancer early on.
Phyto Nutrients Lignan in Rice Rice helps to protect against both breast cancer and heart disease. Rice is high in fiber. It helps in rapid digestion. Also, it is found that eating rice daily can prevent heart disease.
Rice is high in fiber, which limits blood sugar levels. Not only that, handicraft rice is also helpful in maintaining both types of diabetes. Numerous research has shown that eating rice daily reduces asthma. Eating foods rich in insoluble fiber, such as handcuffs daily, helps women to prevent gallstones.
Rice is rich in fiber and helps to digest food very quickly after eating. It helps to prevent constipation and to maintain your gut health. Rice has 21% magnesium in it. Eating a bowl of rice every day makes our bones much stronger and healthier.
The oil available in the rice bran helps to reduce body fat and make the body thinner. Rice is rich in manganese, so the nutrients in it make fatty acid and produce hormones in many nerves in our nervous system

No comments:
Post a Comment
Please Comment