தொலைபேசியை கண்டறிந்த அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்.. பிறந்த தினம் இன்று.!
தொலைபேசியை கண்டறிந்த அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் 1847ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி ஸ்காட்லாந்தில் பிறந்தார்.
இவரது குடும்ப நண்பரான அலெக்ஸாண்டர் கிரகாம் என்பவரின் பெயரையும் இணைத்து அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் என்று இவருக்குப் பெயர் சூட்டப்பட்டது.
பியானோவில் ஒலி எழுப்பி மின்சாரம் மூலமாக அந்த இசையை ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அனுப்பினார். அதேபோல பேசுவதையும் அனுப்பலாமே என்று சிந்தித்து ஆராய்ச்சியில் இறங்கினார்.
1876ஆம் ஆண்டு உலகிலேயே முதன்முதலாக தனது உதவியாளர் வாட்சனிடம் தொலைபேசியில் பேசினார்.
பிறகு 1877ஆம் ஆண்டு வாட்சனுடன் இணைந்து பெல் தொலைபேசி கம்பெனியை தொடங்கினார்.ஏறக்குறைய 60 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை பெற்றார். தகவல் தொடர்பில் புரட்சியை ஏற்படுத்திய இவர் 1922ஆம் ஆண்டு மறைந்தார்.
உலக வனவிலங்குகள் தினம்:
உலக வனவிலங்குகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.வன விலங்குகள் மற்றும் வனத்தில் உள்ள தாவரங்களைப் பாதுகாப்பது, அவற்றின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்நாளின் நோக்கமாகும்.
முக்கிய நிகழ்வுகள்:
1707ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி மொகலாய பேரரசர் ஒளரங்கசீப் மறைந்தார்.
1940ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் பிறந்தார்.
Alexander Graham Bell who discovered the phone ..Birthday.!
Alexander Graham Bell was born on March 3, 1847 in Scotland. He was named Alexander Graham Bell, after his family friend, Alexander Graham. Similarly he embarked on the research, thinking of sending the speech. In 1876 he telephoned his assistant Watson, the first in the world. Then, in 1877, he founded the Bell Telephone Company with Watson.
He received a patent for nearly 60 inventions. He revolutionized communication and disappeared in 1922. World Wildlife Day: World Wildlife Day is celebrated around the world on March 3, every year. Important Events: On 3 March 1707, the Mughal Emperor Aurangzeb disappeared. Born on March 3, 1940, Melmaruvathur Bangaru Adikallar.

No comments:
Post a Comment
Please Comment