தேர்வு அறைக்கு மாணவர்கள் முகக்கவசம், சேனிட்டைசர் கொண்டு வரலாம்.. CBSE அதிரடி அனுமதி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தேர்வு அறைக்கு மாணவர்கள் முகக்கவசம், சேனிட்டைசர் கொண்டு வரலாம்.. CBSE அதிரடி அனுமதி

தேர்வு அறைக்கு மாணவர்கள் முகக்கவசம், சேனிட்டைசர் கொண்டு வரலாம்.. CBSE அதிரடி அனுமதி


டெல்லி: சிபிஎஸ்இ தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் முக கவசம் அணிந்து கொள்ளலாம் என்று தேர்வு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது, இதை தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

கொரோனா வைரஸ், சீனாவில் மிக வேகமாக பரவியது. அந்த உதாரணத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் அந்த அளவுக்கு இப்போது பரவா விட்டாலும் கூட, தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு இப்போது எடுக்க தொடங்கிவிட்டது. 

ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களை, தவிர்ப்பதாக, குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் அறிவித்து விட்டனர். இதேபோல பள்ளிகளில் மாணவர்கள், மாணவிகள் எந்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. 

இதனிடையே சிபிஎஸ்இ தேர்வு இயக்குனரகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிபிஎஸ்இ தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள், முகக் கவசங்கள் அணிந்து கொள்ளலாம், சானிடைசர்களை கொண்டுவரலாம். இதெல்லாம் அவர்கள் விருப்பத்தைச் சார்ந்தது. 

இதற்கு இடையூறு செய்ய மாட்டோம் என்று அறிவித்துள்ளது. தேர்வு நேரங்களில் அதிகப்படியான சோதனைகள் மேற்கொள்ளப்படும் வழக்கம். அப்படி இருந்தும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக முக கவசம் அணிந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Students can be brought to the exam room with a face cover, sanitizer .. CBSE Action Allowance


New Delhi: The CBSE has approved the selection board for students who can write exams and wear masks. The coronavirus is fast spreading in India, and the government is taking various precautions. The coronavirus virus spreads rapidly in China. Based on that example, the government is now beginning to take serious precautions, even though it has spread to such a degree in India. The President, the Prime Minister and the Interior Minister have announced that Holi will be celebrating the festival.

Similarly, the central government has issued guidelines on how students should behave in schools. Meanwhile, the CBSE Examination Directorate announced today that students who can write CBSE exams can wear face shields and bring sanitizers. All this depends on their choice. It has announced it will not interfere. Excessive tests are carried out during the exam. Notwithstanding this, Coronavirus is allowed to wear a face shield because of the panic attack.

No comments:

Post a Comment

Please Comment