ஸ்பானிஸ் ப்ளூ, ஏசியன் ப்ளூ, கரோனாவுக்கு சாட்சியான 100 வயது சுப்பையன்!
திருப்பூர் பல்லடம் வட்டம் மங்கலம் அருகேயுள்ள சின்னப் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 100 வயது விவசாயி சுப்பையன். அந்தக் காலத்திலேயே 6-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர், பாரம்பரிய விவசாயக் குடும் பத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி பழனியம்மாள், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மகன் பழனிசாமி.
இதையும் படிக்கவும்
இப்போதும் விவசாயப் பணிகளில் ஈடுபட்டுவரும் சுப்பையனுக்கு, சில நாட்களுக்கு முன் இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டது.கோவை ராம்நகரில் உள்ள குளோபல் ஆர்த்தோ மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட அவருக்கு, டாக்டர் எஸ்.கார்த்திக் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அறுவைசிகிச்சை மூலம் எலும்பு முறிவை சரி செய்தனர். 1920-ம் ஆண்டுகளில் உலகை உலுக்கிய `ஸ்பானிஸ் ப்ளூ' நோயால் பல கோடி பேர் உயிரிழந்தனர். இந்தியாவிலும் உயிரிழப்புகள் இருந்தன. இந்த காலகட்டத்தைச் சேர்ந்த சுப்பையனின் உறவினர் கள் பலரும் இந்நோயால் உயிரி ழந்தனர். அதன் தாக்கம் குறித்து சுப்பையன் அறிந்துள்ளார்.
அதேபோல, 1956-ல் ஏற் பட்ட காலரா (ஏசியன் ப்ளூ) பாதிப்பையும் இவர் பார்த்துள் ளார். தற்போது கரோனா வைரஸ் நோய் பாதிப்புகளையும் அறிந்துள்ள சுப்பையன் `இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறிய தாவது:
நான் சிறு வயதாக இருந்த போது, உலக அளவிலான `ஸ்பானிஸ் ப்ளூ' நோயால் உறவி னர்கள் பலர் இறந்ததாக பெற்றோர் தெரிவித்தனர். அதற்குப் பிறகு காலரா பரவியபோது, எனது தங்கையைப் பறிகொடுத்தேன். காலராவின்போது ஊரையே காலி செய்துவிட்டு, ஊருக்கு வெளியில் தங்கியிருந்தோம். அந்த காலகட்டத்தில் பல இன்னல்களை சந்தித்துள்ளோம். தற்போது கரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்தும் அறிந் துள்ளேன். இதுபோன்ற பேரி டர்களையெல்லாம் வாழ்வில் கடந்துசெல்லத்தான் வேண்டும்.
நான் எப்போதும் எண்ணெயில் பொரித்த பலகாரங்களை சாப் பிட்டதில்லை. உணவுக்கும் செக்கு எண்ணெய்தான் பயன் படுத்துகிறேன்.
இஞ்சி, மஞ்சள், குருமிளகு இல்லாத உணவுகளை சாப்பிடமாட்டேன். கீழே விழுந்து இடுப்பு எலும்பு உடைவதற்கு முன்புவரை விவசாயப் பணி களை பார்த்துக் கொண்டிருந் தேன் என்றார் சுப்பையன்.
No comments:
Post a Comment
Please Comment