மருத்துவர், செவிலியர்களுக்கு 2 மாதம் தற்காலிக பணி
ஏப்.30-ல் ஓய்வு பெறும்
மருத்துவர், செவிலியர்களுக்கு 2 மாதம் தற்காலிக பணி
முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை:
கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற் கொண்டு வருகிறது. ஏற்கெனவே 1,508 ஆய்வக நுட்புனர்கள், 530 மருத்துவர்கள் மற்றும் 1,000 செவிலியர்கள் தேர்வு செய்யப் பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.
மேலும், கடந்த மார்ச் 31-ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்ற மருத்துவர்கள், செவிலியர் கள், மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ஒப்பந்த முறையில் 2 மாதத்துக்கு தற்காலிக பணி நியமனம் வழங்கப்பட்டு, அவர்களும் தொடர்ந்து பணி யாற்றி வருகின்றனர்.
அதேபோன்று, ஏப்ரல் 30-ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற உள்ள மருத்துவர்கள், செவிலியர் கள், மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகியோருக்கும் ஒப்பந்த முறையில் 2 மாதத்துக்கு தற்காலிக பணி நியமன ஆணை வழங்கப்படும்.
இதைத் தொடர்ந்து, தற்போது மருத்துவ பணியாளர்கள் தேர் வாணையம் மூலம் 1,323 செவி லியர்கள் தேர்வு செய்யப்பட் டுள்ளனர். அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப் பட்டு வருகின்றன. இப்பணியாளர் கள் ஆணைகள் கிடைத்ததும் உடனடியாக பணியில் சேர வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
இவ்வாறு அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!

No comments:
Post a Comment
Please Comment