புதிய கல்வி ஆண்டை செப்டம்பரில் தொடங்கலாம் பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரை
கரோனா வைரஸ் பிரச்சினை கார ணமாக, பல்கலைக்கழகங்கள் மற் றும் உயர் கல்வி நிறுவனங்களின் கல்வி ஆண்டை வரும் செப்டம் பரில் தொடங்கலாம் என்று பல் கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பரிந்துரை செய்துள்ளது.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், நாடு முழு வதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன.
அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட் டுள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்ய யுஜிசி 2 குழுக்களை அமைத்திருந்தது.
ஹரியாணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.சி.குஹாத் தலைமையிலான குழுவும், இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழ (இக்னோ) துணை வேந்தர் நாகேஸ்வர் ராவ் தலைமையிலான குழுவும் ஆய்வு நடத்தின.
இந்தக் குழுக்கள் தங்களது பரிந்துரைகளை யுஜிசி-யிடம் சமர்ப்பித்துள்ளன.
கரோனா பிரச்சினை முடி வுக்கு வந்த பிறகு, கல்லூரி, பல் கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் கல்வி ஆண்டை வரும் ஜூலைக்கு பதில் செப்டம்பரில் தொடங்கலாம் என்று ஒரு குழு பரிந்துரை செய் துள்ளது.
இதுபோல கல்லூரிகள், பல் கலைக்கழகங்களிடம் போதிய அடிப்படைக் கட்டமைப்பு வசதி இருந்தால், மாணவர்களுக்கு ஆன்-லைனில் தேர்வுகளை நடத்த லாம் என்றும், அப்படி முடியாவிட் டால் ஊரடங்கு உத்தரவு முடியும் வரை காத்திருக்கலாம் என்றும் 2-வது குழு பரிந்துரை செய்துள்ள தாக யுஜிசி வட்டாரங்கள் தெரி வித்துள்ளன.
இந்தப் பரிந்துரை களை ஆய்வு செய்து வருவதாக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!

No comments:
Post a Comment
Please Comment