பிப்ரவரி முதல் காலாவதியான
ஓட்டுநர் உரிமங்கள், வாகனப் பதிவு சான்றுகள் ஜூன் 30-ம் தேதிவரை செல்லும்
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு
நாடுமுழுவதும் பிப்ரவரி மாதம் முதல் காலாவதியான ஓட்டுநர் உரிமங்கள், வாகனப்பதிவு, பெர் மிட் உள்ளிட்ட ஆவணங்கள் ஜூன் 30-ம் தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய சாலைபோக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ம் தேதி யில் இருந்து 21 நாட்கள் ஊர டங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது.
அதே நேரத்தில், பொது மக்களுக்கான பல்வேறு நிவார ணங்கள் மற்றும் சலுகைகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் காலாவதியாகும் போக்குவரத்து துறை சார்ந்த உரிமங்கள், சான்றுகளுக்கான செல்லுபடியாகும் காலத்தை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:
பொதுமக்களுக்கு சிக்கல்
கரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு அத்தி யாவசியப் பொருட்கள் கிடைப் பதை உறுதி செய்யும் வகையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட் களை கொண்டு செல்லும் வாக னங்களை இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஊரடங்கு காரணமாக மாநிலங் களில் வட்டாரப்போக்குவரத்து அலு வலகங்கள் மூடப்பட்டுள்ளதால், வாகன பதிவுச்சான்று புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்டவற்றில் பொதுமக்கள் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.
இதை கருத்தில் கொண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின்படி யும், மத்திய மோட்டார் வாகன விதிகளின் படியும் தகுதிச்சான்று, அனைத்து வகை பெர்மிட்கள், ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு உள்ளிட்ட சான்றுகள், ஆவணங்கள் ஆகியவவை பிப்ரவரி 1-ம் தேதியில் இருந்து ஜூன் 30-ம் தேதிக்குள் காலாவதியாகும் பட்சத்தில், அவை ஜூன் மாதம் 30-ம் தேதி வரை செல்லுபடியாகும்.
அனைத்து அம லாக்க அதிகாரிகளும் இந்த காலகட்டத்துக்குள்ளான ஆவணங் களுக்கு செல்லுபடியாகும் காலம் ஜூன் 30-ம் தேதி என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
அனைத்து மாநிலங்களும் இந்த ஆலோசனையின் அவசியத்தை புரிந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment