ரேஷன் கடை ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்க ஊதியம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ரேஷன் கடை ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்க ஊதியம்

மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடை ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்க ஊதியம் தமிழக அரசு அறிவிப்பு 


Read this also வாட்ஸ்அப் கால், வீடியோ பயன்படுத்தும் போது டேட்டா பயன்பாட்டை குறைப்பது எப்படி?




ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளருக்கு ரூ.2,500, எடை போடுபவருக்கு ரூ.2,000 ஊக்க ஊதியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித் துள்ளது. இதுதொடர்பாக கூட்டுறவுத் துறை செயலர் தயானந்த் கட்டாரியா வெளியிட்ட அரசாணை யில் கூறியிருப்பதாவது: தமிழகத் தில் கரோனா நோய்த்தடுப்பு நட வடிக்கையாக 144 தடையுத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ள நிலை யிலும் அனைத்து நாட்களும் நியாயவிலைக் கடைகள் இயங்கி வருகின்றன. 

அலுவலக வேலை நாட்களையும் தாண்டி சில பகுதிகளில் நியாய விலைக் கடைகளில் பொது விநியோகத் திட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கரோனா தடுப்பு நடவடிக் கையின் ஒரு பகுதியாக நியாய விலைக் கடைகள் மூலம் ரூ.1000 நிவாரணம், இலவச பொது விநியோகத்திட்ட பொருட்கள் வழங்கும் அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் அவர்கள் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் ரேஷன் கடை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 



 எனவே, கடைகளில் பணியாற் றும் 21,517 விற்பனையாளர் களுக்கு தலா ரூ.5 ஆயிரம், 3,777 எடை போடுபவர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் ஊக்க ஊதியமாக வழங்கப்பட வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அரசுக்கு பரிந்துரைத்தார். இந்த பரிந்துரையை பரிசீலித்த தமிழக அரசு, விற்பனையாளர் களுக்கு தலா ரூ.2,500 மற்றும் எடை போடுபவர்களுக்கு தலா ரூ.2,000 என ஊக்க ஊதியத்தை அனுமதித்து, உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment