ஸ்மார்ட் போன் உதவியுடன் சீனா முன்னெச்சரிக்கை
வூஹான்: சீனாவின் உள்ளூர் ரயில் நிலையம், ஓட்டல்கள், வூஹான் நகர எல்லைகள் உள்ளிட்ட இடங்களில், சுகாதாரத்துறையினர், 'மொபைல் போன் பார்கோடு' வைத்துள்ளனர்.
மக்கள், ரயில் அல்லது ஓட்டல்களுக்குள் செல்வதற்கு முன், அந்த பார்கோடை, தங்கள் மொபைல் போன் மூலம், 'ஸ்கேன்' செய்ய வேண்டும்.
போனில் பச்சை குறியீடு வந்தால், அங்கு பணியில் இருக்கும் அதிகாரி, அவர்களை உள்ளே அனுமதிக்கிறார்.
சிவப்பு குறியீடு வந்தால், சம்பந்தப்பட்டவர், தொற்றுக்கு ஆளானவர், அறிகுறியுடன் இருந்தவர் அல்லது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர் என, அர்த்தம். இவர்கள், அனுமதிக்கப்படுவதில்லை.
மஞ்சள் குறியீடு வந்தால், அவர் தொற்று உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர் அல்லது 14 நாட்கள் தனிமைபடுத்தல் காலம் முடிவடையாதவர் என அர்த்தம். அவருக்கும், அனுமதி மறுக்கப்படுகிறது.
சீனா, தங்கள் குடிமக்களை பற்றி தகவல் பராமரிப்புக்கு, 'பிக் டேட்டா' என்ற மென்பொருளை, நீண்ட காலமாக பயன்படுத்தி வருகிறது.
அது, கொரோனாவுக்கு பிறகான காலகட்டத்தில், அவர்களுக்கு பெரிதும் உதவுகிறது.
┈┉┅━•• 🌿👨🏻💻🌷👩🏻💻 🌿••━┅┉┈
No comments:
Post a Comment
Please Comment