ரெயில் டிக்கெட் முன்பதிவு நிறுத்தி வைக்கப்படவில்லை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ரெயில் டிக்கெட் முன்பதிவு நிறுத்தி வைக்கப்படவில்லை

14-ந்தேதிக்கு பிறகு பயணம் செய்ய ரெயில் டிக்கெட் முன்பதிவு நிறுத்தி வைக்கப்படவில்லை ரெயில்வே வாரியம் விளக்கம் 


கொரோனா எதிரொலியால் நாடுமுழுவதும் ஏப்ரல் 14-ந்தேதி வரை பயணிகள் ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதனால் குறிப்பிட்ட அந்த தேதி வரை ரெயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு, முழு டிக்கெட் கட்டணமும் திருப்பி அளிக்கப்படும் என ரெயில்வே வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.  

இந்தநிலையில் ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ரெயில்கள் இயக்கப்படுவதால் அதற்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு மீண்டும் தொடங்கியதாக தகவல்கள் வெளியானது. இதற்கு ரெயில்வே வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதில் ‘ஏப்ரல் 14-ந்தேதி நள்ளிரவு 12 மணி வரை அனைத்து பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அந்த காலக்கட்டத்திற்குரிய முன்பதிவு ரெயில் டிக்கெட்டுகள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது. 


 ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு பயணம் மேற்கொள்வதற்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு எதுவும் நிறுத்தி வைக்கப்படவில்லை. 120 நாட்கள் வரம்புக்கு உட்பட்டு ஏப்ரல் 14-ந்தேதி பிறகு பயணம் மேற்கொள்ள, ‘ஆன்-லைனில்’ முன்பதிவு செய்யலாம். ஆனால் ரெயில்வே முன்பதிவு டிக்கெட் கவுண்ட்டர்கள் ஏப்ரல் 14-ந்தேதி வரை மூடப்பட்டிருக்கும்,’ என ரெயில்வே வாரியம் கூறியுள்ளது

No comments:

Post a Comment

Please Comment