வீட்டிலேயே பார்லர் போல் பொலிவான சருமத்தைப் பெற சில டிப்ஸ்!!
தற்போது 21 நாட்கள் ஊரடங்கு என்பதால் பார்லர் செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தியுள்ளது. ஆனால் இதுவும் நன்மைக்காகவே. அனைவருக்கும் அழகான மற்றும் சிறப்பான சருமம் வேண்டும் என்பது விருப்பமாகும். ஆகவே வீட்டில் இருந்து கொண்டே இந்த தீர்வுகளைப் பெறுவதற்கான வழிகளை இப்போது பார்க்கலாம். இந்த எளிய தீர்வுகளைப் பின்பற்றுவதால் பொலிவான சருமம் பெறலாம்.
உங்கள் முகத்தில் சுருக்கம் மற்றும் திட்டுக்கள் இருந்தால் நீங்கள் உங்கள் முகத்திற்கு பாதாம் பயன்படுத்தலாம். பாதாம் பேக் பயன்படுத்தி உங்கள் முகப்பொலிவை மீட்டெடுக்கலாம். இதற்கு உங்களுக்குத் தேவையானது ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சில பாதாம்.
பாதாம் துண்டுகளை அரைத்து தேன் மற்றும் எலுமிச்சை சாற்றுடன் கலந்து முகத்தில் தடவவும்.
இந்த ஃபேஸ் பேக் காயத் தொடங்கும்போது, முகத்தை சூழல் வடிவத்தில் மசாஜ் செய்து பிறகு தண்ணீரால் கழுவவும். முகத்தில் திட்டுக்கள், தழும்புகள் போன்றவற்றைக் கொண்டவர்கள் இதனைப் பயன்படுத்துவதால் நல்ல பலன் கிடைக்கும்.
சரும பராமரிப்பில் ஓட்ஸ் உங்கள் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க, ஓட்ஸ் மற்றும் யோகர்ட் கலந்து தயாரித்த விழுதை பயன்படுத்துங்கள்.
இந்த விழுதை உங்கள் முகத்தில் தடவி, உலர வையுங்கள். முகத்தில் இந்த கலவை முற்றிலும் உலர்ந்த பின்பு பன்னீர் கொண்டு முகத்தை மசாஜ் செய்யுங்கள். அடுத்த சில நாட்களில் உங்கள் முகம் மின்னத் தொடங்கும். ஓட்ஸ் ஒரு இயற்கை எக்ஸ்போலின்ட் ஆகும் .
இது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகள் போன்றவற்றை போக்கும் தன்மை கொண்டது. இந்த விழுதை உங்கள் முகத்தில் தடவி, சூழல் வடிவத்தில் மசாஜ் செய்வதால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் வெகுவாகக் குறையத் தொடங்குகின்றன.
தேன் மற்றும் பன்னீர் (ரோஸ் வாட்டர்) கலவை உடல் எடையைக் குறைக்கவும், ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் பயன்படும் தேன், சருமத்திற்கு சிறந்த பலனைத் தரும். சருமத்திற்கு தேன் பயன்படுத்துவதால் சருமம் மென்மையாகிறது, பிரகாசமாகிறது மற்றும் ஈரப்பதம் அதிகரிக்கிறது.
தெளிவான சருமம் பெற தேன் மற்றும் பன்னீர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் தடவி, வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.
இதனை தொடர்ந்து செய்து வருவதால் சருமத்தில் உண்டாகும் எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றவை குணமாகும். மேலும் இந்த கலவை எல்லாவித சருமத்திற்கும் பொருந்தும்.
Some Tips To Get Bright Skin Like Homemade Parlor !!
The parlor has been shut down since it is currently a 21-day curfew. But this too is for good. It is optional that everyone should have beautiful and fine skin. So let's look at ways to get these solutions right from home. Following these simple solutions can help you get rid of dull skin.
You can use almonds on your face if you have wrinkles and pimples on your face. You can restore your complexion using the almond pack. All you need is a spoonful of honey, a spoon of lemon juice and some almonds. Grind almond slices and mix them with honey and lemon juice.
When this face pack starts to dry, massage your face into the form and then rinse off with water. People who have pimples on the face, scalp, etc. can use it for good. Oatmeal Skin Care To remove dirt from your skin, use oatmeal and yogurt paste.
Apply this paste on your face and let it dry.
Apply this mixture on your face and massage your face with paneer. Your face will start to glow in the next few days. Oats are a natural exfoliant.
It is characterized by dark spots and blemishes on the skin. Apply this paste on your face and massage it into the environment.
Honey and Paneer (Rosewater) is a honey that is used to reduce body weight and improve health.
Applying honey to the skin helps to soften, brighten and increase moisture.
Mix with honey and paneer to get a clear skin. Apply it on your face and rinse with warm water. Doing this regularly will cure skin irritation and itching. And this blend applies to all skin types.
No comments:
Post a Comment
Please Comment