பெண்கள் சரும அழகை மெருகேற்றிக்கொள்ள வேண்டியவை ??
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக விடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவின் காரணமாக, காலையில் அவசர அவசரமாக எழுந்து வீட்டுவேலை செய்ய வேண்டிய நிர்பந்தம் இப்போது இல்லை. வீட்டில் கிடைக்கும் இந்த ஓய்வு நேரங்களை சரும பராமரிப்புக்கு ஒதுக்கி, தங்களின் சரும அழகை இல்லத்தரசிகள் மெருகேற்றிக்கொள்ளலாம்.
1. முதலில் முகத்தை நன்றாக கழுவி பளிச்சென்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு அகன்ற கிண்ணத்தில் 4 டேபிள் ஸ்பூன் பாலை ஊற்றிக்கொள்ளவேண்டும். பருத்தி பஞ்சை உருண்டையாக உருட்டி அதனை பாலில் முக்கி முகத்தை துடைத்து சுத்தப்படுத்த வேண்டும். பின்னர் ஈரமான கைக்குட்டை அல்லது டிஸ்யூ பேப்பரை கொண்டு முகத்தை துடைத்துவிட வேண்டும்.
2. அடுத்ததாக முகத்தில் பூசுவதற்கு எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன், சர்க்கரை 1 டேபிள் ஸ்பூன், தேன் அரை டீஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்றையும் அகன்ற கிண்ணத்தில் போட்டு நன்றாக கலக்க வேண்டும். கிரீம் பதத்துக்கு வந்ததும் கைவிரல்கள் அல்லது பிரஸ்சில் எடுத்து முகத்தில் அழுத்தமாக பூச வேண்டும். கால் மணி நேரம் கழித்து நீரில் கழுவ வேண்டும். பின்னர் ஸ்பாஞ்ச் கொண்டு முகத்தை துடைத்துவிட வேண்டும்.
3. கற்றாழை ஜெல் 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சை சாறு 1 டேபிள்ஸ்பூன், ஆலிவ் எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் ஆகிய மூன்றையும் அகன்ற கிண்ணத்தில் கொட்டி நன்றாக கிளறி கிரீம் தயார் செய்து கொள்ள வேண்டும். பின்பு அந்த கிரீமை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின்பு மென்மையான டிஸ்யூ பேப்பர் அல்லது ஸ்பாஞ்ச் கொண்டு முகத்தை துடைக்க வேண்டும்.
4. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், கடலை பருப்பு மாவு 2 டேபிள்ஸ்பூன், பால் 2 டீஸ்பூன், ரோஸ் வாட்டர் 1 டேபிள்ஸ்பூன், தேன் ஒரு டீஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் தேனை தவிர்த்துவிடலாம். எல்லா பொருட்களையும் கிண்ணத்தில் போட்டு நன்றாக பிசைந்து பேஸ்டை முகத்தில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடங்கள் உலர விடவும். இரண்டு வாரத்துக்கு ஒருமுறை இந்த வழிமுறையை பின்பற்றி வந்தால் சருமம் பளபளப்புடன் ஜொலிக்க தொடங்கும்.
Women need to improve their skin tone ??
Due to a curfew issued due to the spread of coronavirus infection, there is now no compulsion to get up early in the morning and do homework. Housewives can improve their skin care by setting aside these leisure time at home.
1. Wash your face first and keep it shiny. Pour 4 tablespoons of milk into a wide bowl. Cotton wool should be rolled up and dipped in milk and wiped clean. Then wipe your face with a wet handkerchief or tissue paper.
2. Next, take 1 tablespoon of lemon juice, 1 tablespoon of sugar and half a teaspoon of honey. Put the three into a wide bowl and mix well. Once the cream is in the paste, apply it on your hands or finger presses. Wash in water for a quarter hour. Then wipe the face with a sponge.
3. Mix 2 tablespoons of aloe gel, 1 tablespoon of lemon juice and 1 tablespoon of olive oil into a wide bowl and stir well. Then apply the cream on the face and massage for 10 minutes. Then wipe your face with a soft tissue paper or sponge.
4. Take one teaspoon of turmeric powder, 2 tablespoons of seaweed flour, 2 teaspoons of milk, 1 tablespoon of rose water, one teaspoon of honey. People with oily skin can avoid honey. Put all the ingredients into the bowl and mix well. If you follow this procedure every two weeks, your skin will start to glow.
No comments:
Post a Comment
Please Comment