வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் வங்கிகள்.!
டெல்லி: செல்போன் மூலமாக மூலமாக யாரேனும் வங்கிக்கணக்கு விபரங்கள், இஎம்ஐ ஒத்தி வைப்பு என்று ஓடிபி எண்ணை கேட்டால், பகிர வேண்டாம் என்று வங்கிகள் எச்சரித்துள்ளன.
கொரோனா பரவல் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரும் இழப்பு என்பதால், மக்களின் வசதிக்காக சில விலக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக, அடுத்த 3 மாதங்களுக்கு இஎம்ஐ செலுத்த தேவை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும் மோசடி செய்பவர்கள் ஏதேனும் ஒரு வகையில் ஏமாற்றி வருகின்றனர்.
அதற்கு இப்போது கொரோனாவை துணைக்கு அழைத்துள்ளனர். அதன்படி, அடையாளம் தெரியாத சிலர் வாடிக்கையாளர்களை போன் மூலமாக தொடர்பு கொள்கின்றனர்.
உங்களது இஎம்ஐ யை ஒத்தி வைக்க வேண்டும் என்றால் உங்கள் மொபைலுக்கு வரும் ஓடிபி எண்ணை கூறுமாறு அறிவுறுத்துகின்றனர். ஓடிபி எண்ணை தெரிவித்தவுடன் வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படுகிறது.
எனவே, யாரேனும் போன் அழைப்பு மூலமாக ஓடிபி கேட்டால், கவனமாக இருக்குமாறு அனைத்து வங்கிகளும் எச்சரித்துள்ளன. வாடிக்கையாளர்கள் இது பற்றி வங்கிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளன.
No comments:
Post a Comment
Please Comment