எலுமிச்சை பானத்தில் நிறைந்துள்ள நன்மைகள்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

எலுமிச்சை பானத்தில் நிறைந்துள்ள நன்மைகள்!

எலுமிச்சை பானத்தில் நிறைந்துள்ள நன்மைகள்! 

எலுமிச்சை பானம் தயாரிக்கும் முறை தேவையான பொருட்கள் 

எலுமிச்சை – 6, 
தண்ணீர் 1/2 லிட்டர், 
தேன் – தேவையான அளவு. 


தயாரிக்கும் முறை 

முதலில் எலுமிச்சை பழங்களை பாதியாக வெட்டிக் கொள்ளவும். அதன் பிறகு பாத்திரத்தில் 1/2 லிட்டர் தண்ணீரை ஊற்றி வைத்துக் கொள்ளவும். பின்பு அந்த நீரை 3 நிமிடம் அடுப்பில் நன்கு கொதிக்க வைத்து இறக்கவும். 10-15 நிமிடம் ஆறவைத்து, பின்பு அந்த நீரை வடிகட்டி வைத்துக்கொண்டு, ஒரு சிறிய டம்ளரில் அந்த நீரை ஊற்றி கொஞ்சம் தேன் கலந்து குடிக்கவும். 

*இந்த பானத்தை தினமும் காலை ஒரு டம்ளர் குடித்து வந்தால், நோய்யெதிர்ப்பு மண்டலம் வலிமையடைகிறது. எனவே நோய்களின் தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம். 

*தினமும் இந்த நீரை காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீங்கள் மிகவும் ஆற்றலுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம். 

*செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகள் சரியாகும் மற்றும் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை சீராக வைத்துக்கொள்ளும். 


*தினமும் காலையில் இந்த பானத்தை குடித்து வந்தால், உடலில் உள்ள மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, உடலை சுத்தபடுத்தும். முக்கியமாக உடலில் உள்ள PH அளவை நிலைப்படுத்தும். 

*இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்டக்கொழுப்புகள் வெளியேற்றப்படுகிறது, எனவே இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் நல்ல மாற்றங்கள் தெரியும்.

No comments:

Post a Comment

Please Comment