பாடம் சாராத கற்றல் பயிற்சிப் பள்ளிகள் வழங்க கோரிக்கை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பாடம் சாராத கற்றல் பயிற்சிப் பள்ளிகள் வழங்க கோரிக்கை

பாடம் சாராத கற்றல் பயிற்சிப் பள்ளிகள் வழங்க கோரிக்கை

விடுமுறையில் உள்ள மாணவர்களுக்கு, பாடம் சாராத கற்றல் பயிற்சிகளை, பள்ளிகள் வழங்க வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்து உள்ளது 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது; அனைத்து வகை கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் இல்லை என்பதால், பாடங்களை கஷ்டப்பட்டு படிக்க வேண்டாம் என்ற மனநிலையில், மாணவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். 

'டிவி' நிகழ்ச்சிகள், மொபைல் போன்கள், வீட்டுக்குள்ளேயே விளையாட்டுகள் என, பொழுதை கழித்து வருகின்றனர். ஆனாலும், நாள் முழுதும் கேளிக்கைகள், விளையாட்டுகளில் பொழுதை கழிக்க முடியாது.

மேலும், அனைத்து நேரங்களிலும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் இருந்தால், மாணவர்களின் தொடர் கற்றல் திறன் குறைய வாய்ப்புள்ளது . வரும் கல்வி ஆண்டில், புதிய பாட திட்ட பாடங்களை படிப்பதில், சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, ஒவ்வொரு வகுப்பு மாணவருக்கும் தினம் அல்லது வாரம் இரு முறை மேற்கொள்ள வேhண்டிய, சில கற்றல் பயிற்சிகள் குறித்து, பள்ளிகள் தரப்பில், குறிப்புகளை வழங்கலாம்.






பாடம் சாராத கற்றல் பயிற்சிப் பள்ளிகள் வழங்க கோரிக்கை

No comments:

Post a Comment

Please Comment