பொது நுழைவுத்தேர்வை மத்திய அரசு ஏற்கவில்லை
பல்கலைக்கழக மானியக்குழு அமைத்து இருந்த குழுவினர் பரிந்துரைத்து இருந்த அறிக்கையில், கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தலாம் என்று தெரிவித்து இருந்தது.
இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் பொது நுழைவுத்தேர்வு நடத்தலாம் என்ற பல்கலைக்கழக மானியக்குழு அமைத்து இருந்த குழுவினரின் பரிந்துரையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை ஏற்கவில்லை.
இதுதவிர மேலும் சில பரிந்துரைகளையும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை ஏற்காமல், பல்கலைக்கழகங்களுக்கான வழிகாட்டுதல்களை நேற்று வெளியிட்டு இருக்கிறது.


No comments:
Post a Comment
Please Comment