அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தற்காலிகமாக நிறுத்திவைப்பு - மத்திய அரசு. - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தற்காலிகமாக நிறுத்திவைப்பு - மத்திய அரசு.

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தற்காலிகமாக நிறுத்திவைப்பு - மத்திய அரசு. 





அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை தற்காலிகமாக நிறுத்திவைக்க மத்திய அரசு உத்தரவு. அதன்படி , மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை மாதம் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் 01.01.2020 முதல் வழங்கப்பட வேண்டிய நான்கு சதவீத அகவிலைப்படி வழங்கப்படாது. 

மேலும் 01.07.2020 & 01.01.2021 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படியும் வழங்கப்படாது. அதுவரை தற்போதுள்ள 17% என்ற அளவிலேயே நீடிக்கும். ஒரு வேளை 01.07.2021 முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட முடிவெடுக்கப்பட்டால் 01.01.2020,01.07.2020 & 01.01.2021 ஆகிய காலங்களுக்கான ஒட்டுமொத்த அகவிலைப்படி உயர்வுகளும் கணக்கில் கொள்ளப்பட்டு வழங்கப்படும். ஆனால் 01.01.2020 முதல் 30.06.2021 வரையிலான காலத்திற்கு அகவிலைப்படி உயர்வுக்கான நிலுவை தொகை கிடைக்காது.

துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment