தள்ளிவைக்கப்பட்ட பள்ளி மற்றும் நுழைவுத் தேர்வுகளை நடத்த புதிய திட்டம்
தள்ளிவைக்கப்பட்ட பள்ளி மற்றும் நுழைவுத் தேர்வுகளை நடத்த புதிய திட்டம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சி.பி.எஸ்.இ., மத்திய திறந்தவெளி கல்வி அமைப்புகள் மற்றும் பல்வேறு தேர்வு வாரிய பள்ளி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. மேலும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தேர்வுகள் நடைபெற வாய்ப்பில்லை.
புதிய திட்டம்..!
மனிதவள மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரி ஒருவர், தள்ளி வைக்கப்பட்ட அனைத்து தேர்வுகளையும் ஏப்ரல் கடைசி வாரத்தில் தொடங்கி மே மத்தியில் முடிக்கலாம் என திட்டமிட்டு இருக்கிறோம் என தெரிவித்து உள்ளார்.
14-ந்தேதி ஊரடங்கு நிறைவு பெற்றதும் இதுபற்றி அதிகாரிகள் கூடி ஆலோசனை நடத்துவோம். அதில் முடிவு எடுக்கப்பட்டு தேர்வு தேதி அறிவிக்கப்படும். ஏற்கனவே நடந்த தேர்வுகளுக்கான பரீட்சை பேப்பர் திருத்தும் பணி நின்றுவிட்டது, அவையும் தொடங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜூலைக்குள் முடிவு..!
ஏற்கனவே தேசிய தேர்வு ஏஜென்சி (என்.டி.ஏ.) அறிவித்த தேர்வுகளுக்கான விண்ணப்ப காலத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் 7 தேர்வுகளுக்கு கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கான தேர்வு தேதியை ஏப்ரல் 15-ந்தேதிக்கு பிறகு முடிவு செய்ய உள்ளதாக அதிகாரிகள் கூறினார்கள். இந்த தேர்வுகளும் மே மாதம் வாக்கில் நடைபெறும் என்று தெரிவித்தனர். ஜூன் அல்லது ஜூலை மாதத்துக்குள் எல்லா பணிகளும் முடிந்துவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
New plan to hold postponed school and entrance exams
New Scheme for Deferred School and Entrance Examinations CBSE, Central Open Educational Institutions and various Examination Board School Examinations have been postponed due to the spread of coronavirus in India. And the curfew is in effect until April 14, so there are no exams.
New project ..!
"We are planning to postpone all the postponed exams by the last week of April and end by mid-May," an HRD official said. Once the curfew has been completed on the 14th, the authorities will convene. The decision will be announced and the date of selection will be announced. He said that the exam paper for the existing exams has been stopped and that they too will be started.
End of July ..!
The application deadline for exams already announced by the National Selection Agency (NDA) has been extended for a further month. In this way the time limit for 7 choices is extended. Officials said the selection date is to be decided after April 15. These exams will be held by May. Officials say all work will be completed by June or July.
No comments:
Post a Comment
Please Comment