எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ரத்து செய்ய ஆசிரியர் சங்கங்கள் வேண்டுகோள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ரத்து செய்ய ஆசிரியர் சங்கங்கள் வேண்டுகோள்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ரத்து செய்ய ஆசிரியர் சங்கங்கள் வேண்டுகோள் 

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? எப்போது நடைபெறும்? என்ற மன உளைச்சலில் மாணவர்கள் இருக்கிறார்கள். 

இதுவரை தமிழகம் கண்டிராத இந்த அசாதாரண சூழ்நிலையை கருத்தில்கொண்டும், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும் தமிழக அரசு உடனடியாக தள்ளிவைக்கப்பட்ட பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார். 

இதேபோல், தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஊரடங்கு முடிந்தவுடன் வருகிற 15-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு என்பது இயலாத நிலை. எனவே மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தேர்வை ரத்துசெய்து அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்திடவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment