பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு ஆன்லைனில் பாட வகுப்புகள் தொடக்கம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு ஆன்லைனில் பாட வகுப்புகள் தொடக்கம்

பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு ஆன்லைனில் பாட வகுப்புகள் தொடக்கம் 

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் கடந்த மார்ச் 16-ம் தேதி முதல் விடு முறை விடப்பட்டது. இந்நிலை யில், மாணவ, மாணவி களின் நலன் கருதி ஆன்லை னில் வகுப்புகள் தொடங்கப் பட்டுள்ளன. இதுகுறித்து பல்கலைக் கழக துணைவேந்தர் குழந்தைவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரியார் பல்கலைக் கழகத் தில் முதுநிலை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் பாட வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஒரே நேரத்தில் 100 பேர் வரை ஆன்லைனில் இணைக்க கூடிய செயலியை பயன் படுத்தி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பல்கலைக் கழகத் துறைத் தலைவர்கள் ஆன்லைன் வகுப்புக்கான கால அட்ட வணைத் தயார் செய்து மாணவர் களுக்கும், ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ளனர். அதன்படி ஆசிரியர்கள் பாடங்களை நடத்த உள்ளனர். 

 ஆன்லைன் வகுப்புகளுக் கான தொழில்நுட்ப உதவிகளை ஒருங்கிணைப்பதற்காக மேலாண்மைத்துறை இணைப் பேராசிரியர் சுப்ரமணிய பாரதி நியமிக்கப்பட்டுள்ளார். 

நுண்ணுயிரியல் துறைத் தலைவர் பாலகுருநாதன் தலைமையில் பேராசிரியர் குழுவினர் ஆன்லைன் வகுப்பு களைத் தொடங்கிவிட்டனர். 

அதேபோல கணினி அறிவி யல், இயற்பியல், வேதியி யல் உள்ளிட்ட பாடங்களுக் கான வகுப்புகளும் தொடங்கப் பட்டன. மற்ற துறைகள் சார்பி லும் ஆன்லைன் வகுப்பு கள் தொடர்ந்து நடைபெற உள்ளன’என்று தெரிவித்துள் ளார்.

No comments:

Post a Comment

Please Comment