இ.பி.எஃப். தகவல்களை மாற்ற புதிய வழிமுறை கரோனா
வைரஸ் தொற்று காரணமாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்.) தகவல்களை மாற்ற புதிய வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கோவை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் ஜெய் வதன் இங்லே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இ.பி.எஃப். உறுப்பினர்கள் தங்களுடைய யு.ஏ.என்.-ல் (யுனிவர்சல் அக்கவுண்ட் எண்) உள்ள கே.ஒய்.சி. (know your customer) தகவல்களை மாற்றுவதற்கு, ஆன்லைன் சர்வீஸில் புதிய வழிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பி.எஃப். அலுவலகங்களுக்கு பல் வேறு அறிவுரைகள் வழங்கப் பட்டுள்ளன.
ஆதாரை வைத்து யு.ஏ.என்-ல் பிறந்த தேதியை ஆன்லைன் மூலமாக மாற்றுவதற்கு, முன்னர் ஒரு வருடம் வித்தியாசம் இருந்தால் மட்டுமே முடியும்.
ஆனால் தற்போது 3 வருட வித்தியாசம் இருந்தாலும், ஆதாரில் உள்ள பிறந்த தேதியை வைத்து ஆன்லைனில் மாற்றும் வசதி செய்யப்பட்டுள்ளது.
அதற்கு பி.எஃப். உறுப்பினர்கள் ஆன்லைன் மூலமாக தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் உடனடியாக சரிபார்க்கப்பட்டு, பிறந்த தேதி மாற்றப்பட்டுவிடும். உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கவும், கரோனா வைரஸ் தொற்று காரணமாக தங்களுக்குத் தேவைப்படும் முன்பணத்துக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், உறுப் பினர்களின் கே.ஒய்.சி. விவரங்கள் அவர்களது யு.ஏ.என்-ல் சரியாக பதிவேற்றம் செய்திருக்கவேண்டும்.
எனவே, ஆன்லைனில் வரும் கே.ஒய்.சி. மாறுதல்களுக்கான விண்ணப் பங்களை விரைவாக ஒப்புதல் வழங்க, பி.எஃப். அலுவலகங் களுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
Please Comment