இலவச சிலிண்டர்களுக்கு முன்கூட்டியே வங்கி கணக்கில் பணம்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இலவச சிலிண்டர்களுக்கு முன்கூட்டியே வங்கி கணக்கில் பணம்!

இலவச சிலிண்டர்களுக்கு முன்கூட்டியே வங்கி கணக்கில் பணம்! 

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்ட பயனாளிகளுக்கு, இலவச சிலிண்டருக்கான பணம், வங்கி கணக்கில் முன்கூட்டியே செலுத்தப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர், ஜெயதேவன் தெரிவித்துள்ளார்.




Please watch this VIDEO > எல்.கே.ஜி மாணவன் எஸ்.எம்.ஜெய்ஆகாஷின் கொரனோ விழிப்புணர்வு வீடியோ





 இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ஊரடங்கு உத்தரவின் போது பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் வினியோகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உயிரிழந்தால் 5 லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மத்திய அரசு, 'பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா' திட்டத்தின் கீழ், இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்களுக்கு, ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில், தலா, ஒரு சிலிண்டரை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. 

அந்த சிலிண்டரை, ஒரு மாதத்திற்கு ஒன்று என, வாங்கும் வகையில், அதற்கு உரிய தொகை, முன்கூட்டியே பயனாளிகளின் வங்கி கணக்கில், எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் செலுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment