ஆறு பாடங்களுக்கு புதிய பாடத்திட்டம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஆறு பாடங்களுக்கு புதிய பாடத்திட்டம்

ஆறு பாடங்களுக்கு புதிய பாடத்திட்டம் 

 சென்னை: 

கல்லுாரி படிப்பில், ஆறு பாடங்களுக்கு, புதிய பாடத்திட்டத்தை, பல்கலை மானிய குழு அறிவித்துள்ளது. கல்லுாரி பாடங்களில் உள்ள அம்சங்களை செயல்படுத்தும் விதமாக, கற்றல் வெளிப்பாடு திட்டத்தில், புதிய பாடத்திட்டங்களை பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., உருவாக்கி வருகிறது. 

இந்த வரிசையில், இயற்பியல், கணிதம், ஆங்கிலம், மானுடவியல், உளவியல், நுாலக அறிவியல், தாவரவியல், புள்ளியியல், ஊடகவியல் போன்ற, 19 பாடங்களுக்கு, ஏற்கனவே புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சட்டம், தொல்லியல், சமஸ்கிருதம், பாதுகாப்பு படிப்பு, வேதியியல் மற்றும் விலங்கியல் ஆகிய படிப்புகளுக்கு, புதிய பாடத்திட்டத்தை, யு.ஜி.சி., அறிமுகம் செய்துள்ளது. 

விபரங்களை, www.ugc.ac.in என்ற, இணையதளத்தில் பார்க்கலாம். 

 துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment