தாய் இறந்த மறுநாளே பணிக்கு வந்த தூய்மைப் பணியாளர்
தமிழக முதல்வர் பாராட்டு
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே தாய் இறந்த மறுநாளே பணிக்கு வந்த தூய்மைப் பணியாளரின் கடமை உணர்வை தமிழக முதல்வர் பழனிசாமி பாராட்டியுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் ஊராட்சியில் தூய்மைப் பணியாளராக பணி யாற்றி வருபவர் அய்யா துரை(48).
இவரது தாய் அங்கம்மாள் கடந்த 22-ம் தேதி வயது முதிர்வின் காரணமாக இறந்துவிட்டார்.
ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் குறிப்பிட்ட சிலரை வைத்து தாய்க்கு செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளை செய்து அங்குள்ள மயானத்தில் அய்யாதுரை அடக்கம் செய்தார்.
இதனிடையே, வி.களத்தூர் கிராமத்தில் 3 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது.
இதனால், அங்கு தீவிரமாக தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டி இருப்பதால், தனது பணியின் முக்கியத்துவத்்தை உணர்ந்த அய்யாதுரை, தாயை இழந்த மறுநாளே பணிக்கு வந்து வழக்கமான தூய்மைப் பணிகளை மேற்கொண்டார். அவரது கடமையுணர்வை அந்த பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டினர்.
இதுகுறித்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியானது. இதையறிந்த, தமிழக முதல்வர் பழனிசாமி, தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தன் தாயை இழந்த சோகம் தீரும் முன், இறுதிச் சடங்கு முடிந்த அடுத்த நாளே அய்யாதுரை பணிக்கு வந்தது நெகிழ்ச்சி அளிக்கிறது.
மக்களை காக்க வேண்டும் என்ற அவரது உயர்ந்த எண்ணத்துக்கும், அர்ப்பணிப்புக்கும் தலை வணங்குகிறேன்’ என பாராட்டியுள் ளார்.
துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!

No comments:
Post a Comment
Please Comment