மாணவர்களின் குடும்பங்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் உதவி
கோவை ஒத்தக்கால்மண்டம் அரசு மேல்நிலைப் பள்ளி உதவி தலைமையாசிரியர் ப.மூர்த்தி கூறியதாவது: ‘பசிப்பிணி போக்குவோம்’ எனும் வாட்ஸ் அப் குழுவை தொடங்கி, ஆசிரியர்களை இணைத்து நிதி திரட்டினோம். எங்களிடம் பயிலும் மாணவர்களில் ஏழ்மையான குடும்ப பட்டியலை தயாரித்து, ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை அவர்களின் வீடுகளுக்குச் சென்று வழங்கினோம்.
ரேஷன் அட்டை இல்லாத 60 ஏழை குடும்பம் உட்பட 360 குடும்பங்கள் பயன்பெற்றன.
இதற்காக ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை 60 ஆசிரியர்கள் நிதி அளித்தனர். இதுவரை ரூ.1 லட்சம் செலவில்,.4 கட்டங்களாக பொருட்களை வழங்கி உள்ளோம் என்றார்.
துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!

No comments:
Post a Comment
Please Comment