செங்கல் மூலம் கரோனா விழிப்புணர்வு சத்தீஸ்கர் சிறுவர்களுக்கு பிரதமர் பாராட்டு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

செங்கல் மூலம் கரோனா விழிப்புணர்வு சத்தீஸ்கர் சிறுவர்களுக்கு பிரதமர் பாராட்டு

செங்கல் மூலம் கரோனா விழிப்புணர்வு சத்தீஸ்கர் சிறுவர்களுக்கு பிரதமர் பாராட்டு 

அந்த வீடியோவில், வட்ட வடிவில் செங்கற்கள் செங்குத்தாக வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. முதல் செங்கல்லை ஒரு சிறுவன் தட்டிவிடுகிறான். அந்த செங்கல் சரிந்து அடுத்த செங்கல் மீது விழுகிறது. அடுத்தடுத்து அனைத்து செங்கற்களும் சரிந்து விழுகின்றன. 

இப்படித்தான் கரோனா வைரஸ் பரவுகிறது என்று சிறுவன் விளக்கிக் கூறுகிறான். இதன் பிறகு மீண்டும் அதே பாணியில் முதல் செங்கல்லை சிறுவன் தட்டிவிடுகிறான். அடுத்தடுத்த செங்கற்கள் சரிந்து விழுகின்றன. 

அப்போது மற்றொரு சிறுவன் ஓடிச் சென்று நடுவில் உள்ள ஒரு செங்கல்லை எடுத்து விடுகிறான். அத்தோடு செங்கற்கள் சரிவது நின்றுவிடுகிறது. இதை சுட்டிக் காட்டும் சிறுவன், தனித்திருப்பது, சமூக விலகலை கடைப்பிடிப்பதன் மூலம் கரோனா வைரஸ் பரவலை தடுத்து நிறுத்தலாம் என்று அறிவுரை கூறுகிறான். 


 இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "இந்த சிறுவர்கள் தங்கள் விளையாட்டின் மூலம் மிக முக்கியமான வாழ்வியல் பாடத்தை கற்றுத் தந்துள்ளனர்" என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment