வாகனக் காப்பீடு, மருத்துவக் காப்பீடு ஆகியவற்றுக்கு கால அவகாசம் மே 15-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வாகன உரிமையாளர்கள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுத்துள்ளவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வாகனக் காப்பீட்டைப் பொருத்த மட்டில் மூன்றாம் தரப்பு விபத்து காப்பீடு (டிபி) செய்த வாகனங்களுக்கு மட்டும் பொருந்தும்.
சொந்தமாக விபத்து ஏற்பட்டு பழுது ஏற்பட்டால் (ஓடி) அது காப்பீட்டு வரம்புக்குள் வராது. மூன்றாம் தரப்பு காப்பீடு திட்டங்களுக்கு மட்டும் கால அவ காசம் நீட்டிக்கப்படுவதாக காப் பீட்டு ஒழுங்குமுறை ஆணைய (ஐஆர்டிஏ) அதிகாரிகள் தெரி வித்தனர். மார்ச் 25 முதல் மே 3-ம் தேதிக்குள் காலாவதியாகும் காப்பீடுகளுக்கு மட்டும் இந்த கால நீட்டிப்பு பொருந்தும்.

No comments:
Post a Comment
Please Comment