வேலைவாய்ப்புகள் நிறைந்த கலை அறிவியல் படிப்புகள்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வேலைவாய்ப்புகள் நிறைந்த கலை அறிவியல் படிப்புகள்!

வேலைவாய்ப்புகள் நிறைந்த கலை அறிவியல் படிப்புகள்! 

 பிளஸ் டூ தேர்வுகளை முடித்துவிட்டு, அடுத்து என்ன படிக்கலாம் என்று சிந்தனையுடன் வீட்டில் காத்திருக்கிறார்கள் மாணவர்கள். அவர்களுக்கு வழிகாட்டும் நோக்கில் சில கலை அறிவியல் படிப்புகள் பற்றிய விவரங்கள்...

  பி.எஸ்சி. ஏவியேஷன் 

பிளஸ் டூ வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் எடுத்துப் படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் இருப்பது அவசியம். இந்த மூன்று ஆண்டுகால படிப்பில், ஏர்போர்ட் ஆபரேஷன், ஏர் ரெகுலேஷன், ஏவியேஷன் வெதர், நேவிகேஷன் ஏர்போர்ட் செக்யூரிட்டி அண்ட் சேப்டி, டேஞ்சரஸ் கூட்ஸ், ப்ளைட் ஆபரேஷன்ஸ், விமானம் புறப்படுவதற்கு முந்தைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள், இன்டெர்னல் மெக்கானிஸம் ஆப் ஏர்கிராப்ட் போன்ற பாடங்கள் கற்றுத்தருவார்கள். படிப்பை முடித்தவர்களுக்கு ஏவியேஷன் செக்யூரிட்டி, கார்கோ ஹேண்ட்லிங், பைலட் இன்ஸ்ட்ரக்டர், பிளைட் ஆபரேஷன், டெஸ்ட்பாச்சர், பிளைட்/டேட்டா அனாலிசிஸ், லோட் அண்ட் ட்ரிம் பிரிவுகளில் வேலைகள் காத்திருக்கின்றன. சில கல்லூரிகளில் பிபிஏ ஏவியேஷன், எம்பிஏ ஏவியேஷன் படிப்புகளும் கற்றுத் தரப்படுகின்றன. 

  பி.எஸ்சி. ஏரோநாட்டிக்கல் சயின்ஸ் ஏவியேஷன் 

படிப்பில் இருக்கும் பாடங்களுடன் ஏர்கிராப்ட் டிசைன், மெயின்டனன்ஸ் என்ஜினீயரிங் ஆகியவற்றை கூடுதலாக கற்றுத்தருவார்கள். பிளஸ் டூ வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை முதன்மைப் பாடங்களாக எடுத்துப் படித்திருப்பவர்கள் இந்தப் படிப்பில் சேரலாம். படிப்பை முடித்தவர்களுக்கு லைன் மெயின்டனன்ஸ் மேனேஜ்மெண்ட், லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மெண்ட், ஏர்கிராப்ட் ஆபரேஷன் மேனேஜ்மெண்ட், பிளானிங் ஆப் ஏர்கிராப்ட் சர்வீஸிங், கிரவுண்ட் எக்யூப்மெண்ட் மேனேஜ்மெண்ட், கார்ப்பரேட் ஃப்ளீட் மேனேஜ்மெண்ட், பர்ச்சேஸ், லீஸ் அண்ட் சார்ட்டர்ஸ், ஏர்போர்ட் டிரான்ஸ்போர்ட்டேஷன், ஹாஸ்பிட்டாலிட்டி, பேக்கேஜ் ஹேண்ட்லிங் அண்ட் லாஜிஸ்டிக்ஸ், ப்யூல் சப்ளை மேனேஜ்மெண்ட் அண்ட் குவாலிட்டி கண்ட்ரோல், எஸ்டேட் மேனேஜ்மெண்ட், ஏர்பீல்டு செக்யூரிட்டி ஆகிய துறைகளில் பணிகள் கிடைக்கும்.

  பிளஸ் டூ வகுப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். காமர்ஸ் படித்திருப்பவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமை உண்டு. விமான நிலையத்தை நிர்வகிக்கத் தேவையான தகுதிகளையும், திறன்களையும் வளர்ப்பதுதான் படிப்பின் நோக்கம். விமான நிலையம் இயங்கும் முறைகள், பணியாளர்களை நிர்வகித்தல், மற்ற துறைகளை ஒருங்கிணைத்தல், பாதுகாப்பு மற்றும் அவசர கால நிர்வாகம், சரக்குப் போக்குவரத்து நிர்வாகம், விமான நிலைய நிர்வாகம், ஏர் ட்ராபிக் கண்ட்ரோல், ஏவியேஷன் நுட்பங்கள் ஆகிய முக்கிய பாடங்களை கற்றுத்தருவார்கள். அதுமட்டுமின்றி, பிறரோடு தகவல்தொடர்பு கொள்ளும் திறன், மொழித்திறன், ஆளுமைத் திறன், முடிவெடுக்கும் திறன் போன்றவற்றை வளர்க்கும் பாடங்களும் கற்பிக்கப்படும். விமான நிலையத்தில் பயணிகளுக்கான சேவைகள், பாதுகாப்பு ஆகியவற்றை வழங்கும் பொறுப்புமிக்க பணிகளில் சேர வாய்ப்புகள் உண்டு

. பி.எஸ்சி. ஃபாரன்ஸிக் சயின்ஸ் 

  குற்றப் புலனாய்வுத்துறையில் களமிறங்கி குற்றங்களைக் கண்டுபிடிக்கவேண்டும், நீதியை நிலைநாட்டவேண்டும் என்ற விருப்பம் உடையவர்களுக்கு ஏற்ற படிப்பு. பிளஸ் டூ வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். பயாலஜி, பயாலஜி லேபரேட்டரி, இன்ட்ரொடெக்ஷன் டூ ஃபாரன்ஸிக் சயின்ஸ், பிசிக்ஸ், பிசிக்ஸ் லேபரேட்டரி, பேசிக் அனலிட்டிக்கல் கெமிஸ்ட்ரி, என்விரான்மென்டல் ஸ்டடீஸ், ஃபாரன்ஸிக் பயாலஜி லேபரேட்டரி, ஃபாரன்ஸிக் டெர்மட்டோக்ளிபிக்ஸ், ஃபாரன்ஸிக் டெர்மட்டோக்ளிபிக்ஸ் லேபரேட்டரி, ஃபாரன்ஸிக் பிஸிக்ஸ் லேபரேட்டரி, கெமிஸ்ட்ரி லேபரேட்டரி, பால்லிஸ்டிக்ஸ் லேபரேட்டரி, ஃபாரன்ஸிக் மெடிசின், டாக்ஸிக்காலஜி லேபரேட்டரி, இன்ஸ்ட்ரூமென்ட் மெத்தட்ஸ், பாரன்ஸிக் ஆந்த்ரோபாலஜி, ஆந்த்ரோபாலஜி லேபரேட்டரி ஆகிய முக்கிய பாடங்கள் கற்றுத்தரப்படும். காவல்துறை, உளவுத்துறை, குற்றப்புலனாய்வு, சைபர் கிரைம் பிரிவினர்களுக்கு சவாலான குற்ற வழக்குகளில் புலனாய்வு செய்ய பாரன்ஸிக் சயின்ஸ் படித்தவர்கள் உதவியாக இருக்கிறார்கள். பி.ஏ. கிரிமினாலஜி 

div style="text-align: justify;">   பிளஸ் டூ வகுப்பில் எந்த ஒரு பிரிவை எடுத்துப் படித்திருந்தாலும், இந்தப் படிப்பில் சேரமுடியும். ஆங்கில மொழிப்புலமை அவசியம். பிரின்சிபில்ஸ் ஆப் கிரிமினாலஜி, கிரிமினல் லாஸ், ஹியூமன் பிஹேவியர் அண்ட் கிரிமினாலஜி, சைக்காலஜி ஆப் க்ரைம், கான்டெம்பரரி க்ரைம்ஸ், போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன், கவுன்சலிங் அண்ட் கைடன்ஸ், ஹியூமன் ரைட்ஸ் அண்ட் தி ஸ்டடி ஆப் போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன், விஜிலன்ஸ் அண்ட் செக்யூரிட்டி மேனேஜ்மெண்ட் பிரைவேட் டிடெக்ஷன் அண்ட் இன்வெஸ்டிகேஷன், கவுன்சலிங் அண்ட் கைடன்ஸ் ஆகியவை முக்கிய பாடங்களாக கற்றுத்தரப்படும். சில கல்லூரிகளில் பிஏ கிரிமினாலஜி அண்ட் போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற பெயரிலும் பட்டப்படிப்பு உள்ளது. கிரிமினாலஜி முடித்தவர்களுக்கு காவல்துறை பணிகளில்,சிறைத்துறைப் பணிகளில் அதிக முன்னுரிமை வழங்கப்படும். தனியே டிடெக்டிவ் ஏஜென்ஸி, ஃபாரன்ஸிக் லேப் நடத்தலாம். ராணுவ பணிகளிலும் சேரலாம். இதேதுறையில் மேற்படிப்பு படித்து சிறைகளில் மன நல ஆலோசகராகப் பணியாற்றலாம்.

  பி.எஸ்சி. இன்டீரியர் டிசைன் 

  பிளஸ் டூ வகுப்பில் எந்த பாடப்பிரிவை எடுத்திருந்தாலும் சரி, உங்களுக்கு புதுமையான சிந்தனை இருக்கிறதா? புதிது புதிதாக வடிவமைக்க வேண்டும் என்ற வேட்கை இருக்கிறதா? அப்படியெனில் உங்களுக்கான படிப்புதான் இந்த இன்டீரியர் டிசைன் படிப்பு. வீடு, அலுவலகம், ஷோரூம், கல்யாண மண்டபம் என எந்த கட்டடமாக இருந்தாலும் சரி, இருக்கும் இடத்திற்குள் மனதைக் கவரும்விதமாக பெயிண்ட் முதற்கொண்டு, சமையலறை அமைப்பு வரை அழகியல்ரீதியாக அமைப்பதற்குச் சொல்லித்தருவதுதான் இந்தப் படிப்பின் சிறப்பு. இன்டீரியர் மெட்டீரியல்ஸ், இன்டெர்னல் பில்டிங் சர்வீசஸ், டிசைன் பிரின்ஸிபல்ஸ், கான்செப்ட்ஸ், கலர் தியரி, டைப்பாலஜி ஆப் பில்டிங்ஸ் - அவற்றுக்கேற்ற டிசைன் அமைப்புகள், வடிவியல் போன்றவை முக்கிய பாடங்களாக கற்றுத்தரப்படும். ஆறுமாத களப்பயிற்சியும் உண்டு. ஆர்க்கிடெக்ட், இன்டீரியர் டெக்கரேஷன், மாடுலர் கிச்சன் மற்றும் டைல்ஸ் வடிவமைப்பு நிறுவனங்களில் வேலை கிடைக்கும். மேலும், சொந்த நிறுவனம் தொடங்கி இன்டீரியர் டெக்கரேஷன் பணிகளைச் செய்யலாம். 

  பி.எஸ்சி. ஃபயர் - இன்டஸ்ட்ரியல் சேப்டி 

பிளஸ் டூ வகுப்பில் ஏதேனும் ஒரு பிரிவை எடுத்துப் படித்திருந்தால் போதும். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு இரண்டு ஆண்டு ஐடிஐ படித்தவர்களும், டிப்ளமோ படித்தவர்களும் இப்படிப்பில் சேர தகுதியானவர்கள்தான். திரையரங்குகள், தீம் பார்க்குகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், அபார்ட்மெண்ட்கள் என அதிகம் பேர் கூடுகின்ற, இடங்களில் பயர் சேப்டி என்பது மிகவும் முக்கியமானது. மிக உயரமான இடங்களில் வேலை செய்யும்போது செய்யப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தீப்பிடித்தால் எளிதில் தப்பிக்கும் வழிகளையும், தீத்தடுப்பு உபகரணங்களையும், தீப்பிடிக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் முதன்மையாக கற்றுத்தருவார்கள்.

  ஃபன்டமன்டல்ஸ் ஆஃப் ஃபயர் அண்ட் சேப்டி, சேப்டி என்ஜினீயரிங், சேப்டி இன் கன்ஸ்ட்ர ஷன் என்ஜினீயரிங், ஃபயர் என்ஜினீயரிங், என்விரான்மெண்ட் அண்ட் பொல்யூஷன், சேப்டி அண்ட் லா, சேப்டி மேனேஜ்மெண்ட், சேப்டி இன் கெமிக்கல் அண்ட் எலெக்ட்ரிக்கல் இன்டஸ்ட்ரி, ஃபண்டமன்டல்ஸ் ஆஃப் டிசாஸ்டர் மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட முக்கிய பாடங்கள் கற்றுத்தரப்படும். படிப்பை முடித்தவர்களுக்கு உள்நாட்டில் மட்டுமின்றி அயல்நாடுகளிலும் சேப்டி சூப்பர்வைஸர், சேப்டி ஆபிஸர், ஃபயர் மேன், ஃபயர் ஆபிஸர், லீடிங் ஹேண்ட் ஃபயர்மேன், அசிஸ்டண்ட் சேப்டி மேனேஜர் உள்ளிட்ட பணிகள் கிடைக்கும். 

பி.காம். பேங்க் மேனேஜ்மெண்ட் 

  தற்போது வங்கிகளில் பணியாற்றுவதற்காக பிரத்யேக படிப்புகள் உள்ளன. பிளஸ் டூ வில் கணிதம் அல்லது வணிக கணிதம், காமர்ஸ் ஆகியவற்றை முதன்மைப் பாடங்களாக எடுத்துப் படித்திருக்க வேண்டும். பைனான்ஸியல் அக்கவுண்டிங், பிஸினஸ் கம்யூனிக்கேஷன், பிரின்ஸிபல்ஸ் ஆப் மைக்ரோ எகனாமிக்ஸ், பிரின்ஸிபல்ஸ் ஆப் மேனேஜ்மெண்ட், பிரின்ஸிபல்ஸ் ஆப் மேக்ரோ எகனாமிக்ஸ், கார்ப்பரேட் அக்கவுண்டிங், பிஸினஸ் லா, பேங்கிங் தியரி, லா அண்ட் ப்ராக்டீஸ், பிஸினஸ் ஸ்டாட்டிஸ்டிக்ஸ், பிஸினஸ் மேத்தமேட்டிக்ஸ், பிஸினஸ் டாக்ஸேசன், தியரி ஆப் மணி அண்ட் பேங்கிங், டெக்னாலஜி இன் பேங்கிங், பிராக்டிக்கல் ஆடிட்டிங், இண்டர்நேஷனல் பேங்கிங், இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மெண்ட், மார்க்கெட்டிங் ஆப் பேங்கிங் சர்வீஸஸ் ஆகியவை முக்கிய பாடங்களாக கற்றுத்தரப்படும். அரசு மற்றும் தனியார் வங்கிகளில், நிதித்துறை நிறுவனங்களில், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்புகள் கிடைக்கும்.

  பிபிஏ - லாஜிஸ்டிக்ஸ் அண்ட் சப்ளை செயின் மேனேஜ்மெண்ட்

  வெளிநாடு அல்லது உள்நாட்டில் இருந்து ஒரு பொருளை இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்யும் வேலை, நீர் வழி, வான் வழி, தரை வழி என மூன்று வழிகளிலும் பொருட்களை ஏற்றி, இறக்கும் சட்டமுறைகள், வழிமுறைகள், பொருட்களின் தேவை, சரக்குகளைக் கையாளுதல் போன்றவற்றில் எப்போதுமே வேலைவாய்ப்புகள் இருந்துகொண்டே இருக்கின்றன. இந்த துறையில் நுழைய விரும்புவோருக்கு ஏற்ற படிப்பு. பிளஸ் டூ வகுப்பில் வணிகம் அல்லது கணிதம் ஆகியவற்றை முக்கிய பாடமாக எடுத்துப் படித்து, 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

  மேனேஜ்மெண்ட் ப்ராசஸ், அக்கவுண்டிங் ஃபார் மேனேஜெர்ஸ், மேத்தமெட்டிக்ஸ் பார் மேனேஜர்ஸ், சப்ளை செயின் மேனேஜ்மெண்ட், எஸ்போர்ட் டிரேட் அண்ட் டாக்குமெண்டேஷன், இன்டர்நேஷனல் ஸ்ட்ரேட்டஜிக் மேனேஜ்மெண்ட், இ- லாஜிஸ்டிக்ஸ், ஷிப்பிங் அண்ட் போர்ட் மேனேஜ்மெண்ட், ஏர் கார்கோ லாஜிஸ்டிக்ஸ், ட்ரான்ஸ்போர்ட்டேக்ஷன் வேர்ஹவுசிங் அண்ட் பிரெயிட் மேனேஜ்மெண்ட், ரீடெய்ல் சப்ளை மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட முக்கிய பாடங்கள் கற்றுத்தரப்படும். 

  படிப்பை முடித்த பட்டதாரிகள் சரக்குகளைக் கையாளும் நிறுவனங்களில் கஸ்டமர் சர்வீஸ் மேனேஜர், வெகிக்கிள் பிளீட் மேனேஜர், டிஸ்ட்ரிபியூஷன் சென்டர் ஆபிஸர், இம்போர்ட் அண்ட் எக்ஸ்போர்ட் ஏஜெண்ட், கார்கோ ஆபரேஷன்ஸ் ஸ்பெஷலிஸ்ட், இன்வெட்டரி கண்ட்ரோல் மேனேஜர், பர்ச்சேஸிங் மேனேஜர், அகாடமிக் ஆப் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மெண்ட், ப்ரெயிட் கோஆர்டினேட்டர் ஆகிய பணிகளில் சேரலாம். 

  பிபிஏ - என்டர்பெர்னர்ஷிப் அண்ட் பேமிலி பிஸினஸ் சுயமாக தொழில் தொடங்கி சாதிக்கவேண்டும், தனது குடும்பத் தொழிலை நல்ல நிலையில் உயர்த்தவேண்டும் என்று விரும்புவோருக்கு ஏற்ற படிப்பு. பிளஸ் டூ வகுப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்படிப்பில் மனித வள மேலாண்மை, மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட், பைனான்ஸ் மேனேஜ்மெண்ட், அக்கவுண்டிங், இன்கம்டாக்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷன், ஆர்கனைசேஷன் பிகேவியர், எகனாமிக்ஸ், பேமிலி பிஸினஸ் மேனேஜ்மெண்ட், பிஸினஸ் லா, பிஸினஸ் எத்திக்ஸ், புரடக்ஷன் மேனேஜ்மெண்ட், காஸ்ட் அண்ட் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டிங், பிஸினஸ் கம்யூனிக்கேஷன், என்டர்பெர்னர்ஷிப் ஆகியவை முக்கிய பாடங்களாக கற்றுத்தரப்படும். 


Google Translation please ignore if any mistakes


Career Arts and Science Courses!

 Students complete the plus two exams and wait at home thinking about what to read next. Details of some art science courses aimed at guiding them ...

  BSc. Aviation

Plus Two should have studied Mathematics, Physics and Chemistry. A minimum of 50% marks is required. During this three-year course, lessons in Air Operation, Air Regulation, Aviation Weather, Navigation Airport Security and Safety, Dangerous Goods, Flight Operations, Pre-Flight Operations, Internal Mechanism of Aircraft. Those looking for jobs in Aviation Security, Cargo Handling, Pilot Instructor, Flight Operation, Testbatcher, Flight / Data Analysis, Load and Trim sectors. Some colleges also offer BBA Aviation and MBA Aviation courses.

  BSc. Aeronautical Science Aviation

In addition to the courses, they will also teach Aircraft Design and Maintenance Engineering. Those who have taken math, physics and chemistry as a main subject in the Plus Two class can enroll in this course. Those who have completed the course are Line Maintenance Management, Logistics Management, Aircraft Operation Management, Planning of Aircraft Servicing, Ground Equipment Management, Corporate Fleet Management, Purchase, Lease and Charter, Airtel Jobs in the fields of Management and Quality Control, Estate Management and Airfield Security are available.

  Should have passed the Plus Two class with at least 60% marks. Commerce educators have a preference for admission. The purpose of the study is to develop the skills and competencies required to manage the airport. They will teach the core subjects of airport operating systems, personnel management, coordination of other departments, safety and emergency management, freight management, airport management, air traffic control and aviation techniques. In addition, subjects that develop communication skills, linguistic, personality, and decision-making skills will be taught. Opportunities to join responsible services that provide passenger services and security at the airport

. BSc. Forensic Science

  Suitable study for those who have a passion for criminal justice and justice. Passed in Plus Two class with minimum 60% marks in Physics, Chemistry, Biology, Mathematics and English. Biology, Biology Laboratory, introteksan Two hparansik Science, Physics, Physics Laboratory, Basic analittikkal Chemistry, Environmental Studies, hparansik Biology Laboratory, hparansik termattoklipiks, hparansik termattoklipiks Laboratory, hparansik Physics Laboratory, Chemistry Laboratory, Laboratory pallistiks, hparansik Medicine, Tub Key lessons will be taught in Toxicology Laboratory, Instrument Methods, Paranormal Anthropology and Anthropology Laboratory. For those who have studied barangay science, the police, intelligence, criminal investigations and cybercrime sections are useful in investigating criminal cases. BA Ciriminalogy

Any class in Plus Two class can be enrolled in this course. English language skills are essential. Principles of Criminology, Criminal Laws, Human Behavior and Criminology, Psychology of Crime, Contemporary Crimes, Police Administration, Counseling and Guidance, Human Rights and the Study of Police Administration, Vigilance and Security, Vigilance and Security Will be taught. Some colleges also have a BA Criminology and Police Administration degree. Those who have completed criminology will be given high priority in police and prison work. A separate detective agency can conduct a forensic lab. Enlist in the military. Similarly, you can study supervision and serve as a mental health counselor in prisons.

  BSc. Interior Design

  Do you have any innovative thinking, no matter what course you took in the Plus Two class? Do you have a desire to innovate? So this is your interior design course. The specialty of this study is that it can be painted inside the house, office, showroom, wedding hall, aesthetics and even the kitchen layout. The main subjects will be taught Interior Materials, Internal Building Services, Design Principles, Concepts, Color Theory, Typology of Buildings - their respective design systems and geometry. There is also a sixth field exercise. Find jobs in Architect, Interior Decoration, Modular Kitchen and Tiles Design firms. Also, starting your own company can do interior decoration tasks.

  BSc. Fire - Industrial Safety

If you have studied any of the plus two classes. Two year ITI and Diploma after completing 10th class are eligible. Fire Safe is very important in places where theaters, theme parks, factories, businesses, apartments are crowded. They will learn firsthand what precautions should be taken when working in high places, ways to escape fires, fire extinguishers and fire extinguishers.

  Fundamentals of Fire and Safety, Safety Engineering, Safety in Construction Engineering, Fire Engineering, Environment and Pollution, Safety and Law, Safety Management, Safety in Chemical and Electrical Industry, Fundamentals of Fundamentals Those who have completed their studies will have jobs in the local and foreign countries including the Safety Supervisor, Safety Officer, Fire Man, Fire Officer, Leading Hand Fireman, Assistant Safety Manager.

Of B.Com. Bank Management

  Currently there are specialized courses for working in banks. Plus two maths or business mathematics and commerce should be taken as the main subjects. Financial Accounting, Business Communication, Principles of Microeconomics, Principles of Management, Principles of Macroeconomics, Corporate Accounting, Business Law, Banking Theory, Law and Practice, Business Statistics, Business Statistics, Business Statistics, Business Statistics Banking, Practical The main subjects will be Auditing, International Banking, Investment Management, Marketing of Banking Services. Opportunities to work in government and private banks, financial institutions and private companies

  PBA - Logistics and Supply Chain Management

  There are always jobs in importing or exporting a product from overseas or locally, such as the water, air, air and ground routes. Suitable course for those who wish to enter this field. Plus Two should be a major in Business or Mathematics in class two and should have passed 60% marks.

  Management Process, Accounting for Managers, Mathematics for Managers, Supply Chain Management, Export Trade and Documentation, International Strategic Management, e-Logistics, Shipping and Port Management, Air Cargo Logistics, Air Cargo Logistics, Air Cargo Logistics, Air Cargo Logistics Important lessons will be taught.

  Graduate Degree Inventory handling companies include Customer Service Manager, Vehicle Fleet Manager, Distribution Center Officer, Import and Export Agent, Cargo Operations Specialist, Inventory Control Manager, Purchasing Management, Purchasing Management, Purchasing Management, Purchasing Management.

  PBA - Entrepreneurship and Family Business is an ideal course for those who want to start their own business and improve their family business. Should have passed any category in Plus Two class. This Human Resource Management, Marketing Management, Accounting Management, Financial Accounting, inkamtaks, Information Technology, Computer Application, Organization Behavior, Economics, Family Business Management, Business Law, Business Ethics, Production Management, Cost and Management Accounting, Business Communication, entarpernarsip become The main subjects taught.


 துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!

No comments:

Post a Comment

Please Comment