குழந்தைகளுக்கு புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது எப்படி? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

குழந்தைகளுக்கு புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது எப்படி?

குழந்தைகளுக்கு புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது எப்படி?

 புத்தகங்களைப் படிக்கும் குழந்தைகள் இயல்பாகவே அறிவுத் திறனையும், கற்பனை ஆற்றலையும், நினைவாற்றலையும் பெற்று விடுகின்றனர். புத்தகங்களைப் படிக்கும் குழந்தைகள் அதில் வரும் பாத்திரங்களை மனதில் காட்சிப் படுத்தும் போதே கற்பனைத் திறன் விரிவடைகிறது. மனம் சோர்ந்திருக்கும் போது ஊக்கத்தையும் தருவது புத்தகங்கள் தான். அறம் சார்ந்த சிந்தனைகளையும் சமூகம் சார்ந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முயல்வது புத்தகங்கள். நம்சிந்தனையைத் துாண்டவும்,சிந்தனையைப் புதுப்பிக்கவும் உதவுவது புத்தகங்கள். 

நம் மனதை உழுது, அதில் நல்ல பண்புகளை விதைப்பது புத்தகங்ள். சிறந்த வாசிப்பாளனால் மட்டுமே சிறந்த எழுத்தாளானாக முடியும். படித்த புத்தகத்தில் உள்ள செய்திகள் பற்றி கலந்துரையாடுங்கள். குழந்தைகளின் பிறந்த நாளில் புத்தகங்களைப் பரிசளியுங்கள். கதைகளை படிக்கும் குழந்தைகளை பின்னர் அவற்றை கூறச் செய்யலாம். 

கதை சொல்லிகளாக இருந்த பாட்டிகள் விட்டுச் சென்ற வெற்றிடத்தை குழந்தைகளைக் கொண்டு நிரப்புங்கள். பின்னாளில் அவர்களை சிறந்த கதை சொல்லிகளாக உருவாக்கும் நல் வாய்ப்பை புத்தகங்கள் வழங்குகின்றன. முதலில் பெற்றோர் முன்னுதாரணமாக இருந்து புத்தகங்களை வாசிக்க வேண்டும். குழந்தைகளுக்கும் அப்பழக்கம் இயல்பாக மாறிவிடும். தேடலை உருவாக்கி அவர்களின் சிந்தனைகளைத் துாண்டிவிடும். 

How do you make children read books?

 Children who read books naturally acquire knowledge, imagination, and memory. Imagination expands as children read the books and visualize the characters in it. It is the books that give encouragement when the mind is tired. Books seek to impact charitable thinking and community impact. Books to help us clear our mind and refresh our thinking.

Books that plow our minds and sow good qualities in it. Only the best reader can become a better writer. Discuss the messages in the read book. Gift books for children's birthdays. Children who read stories can tell them later.

Fill the void left by grandmothers who were story tellers. The books offer a good chance of later making them great story tellers. Parents should first read books from the perspective. Children also become natural. Creating a quest will disrupt their thinking.

 Hello dear friends, please don't forget to SHARE if you like this post! Join in the friendship! Thanks!!!



 துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment