கோடை காலத்திலும் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு - அமைச்சர் ரமேஷ் போக்ரியால் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கோடை காலத்திலும் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு - அமைச்சர் ரமேஷ் போக்ரியால்

கோடை காலத்திலும் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு - அமைச்சர் ரமேஷ் போக்ரியால்




புதுடில்லி:'ஊரடங்கு உள்ளதால், கோடை விடுமுறை காலத்திலும், பள்ளி மாணவர்க்கு, மதிய உணவு வழங்கப்படும்' என, மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர், ரமேஷ் பொக்கிரியால் நிஷாங்க் தெரிவித்தார். இவர், மாநிலக் கல்வி அமைச்சர்களுடன், -'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் கூறியதாவது:

ஊரடங்கு உள்ளதால், கோடை விடுமுறையிலும், மாணவர்களுக்கு, மதிய உணவு வழங்கப்படும். மதிய உணவு திட்டத்தின் கீழ், முதல் காலாண்டுக்காக, முதல்கட்டமாக, 2,500 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய கல்வி வாரியம் நடத்திய, 10 மற்றும் பிளஸ் 2 தேர்வு வினாத் தாள் திருத்தும் பணிகளை துவக்க, அனைத்து மாநிலங்களும் உதவிட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.



துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment