பிராட்பேண்ட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
மும்பை: நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு பிராட்பேண்ட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என கிரிசில் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, வீட்டிலிருந்து அலுவலகப் பணிகளை மேற்கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வீட்டிலிருந்து பணிபுரிய முக்கியத் தேவை, பிராட்பேண்ட். அதனால், பிராட்பேண்ட் மற்றும் டேட்டா பயன்பாடு கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
நிலையான பிராட்பேண்ட் இணைப்புகள் வீடுகள் மற்றும் அலுவலகப் பணிகளுக்காக அதிகம் பெறப்படுகின்றன. தொலைத்தொடர்பு சேவையை மக்கள் அதிகம் பெற வேண்டும் என்ற நோக்கில் சேவை நிறுவனங்கள் பல்வேறு சலுகை திட்டங்களை அவ்வப்போது அறிவித்து, வாடிக்கையாளர்களை ஊக்கப்படுத்தி வருகின்றன.
இருந்தாலும், 2016 ஆம் ஆண்டு முதல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர் எண்ணிக்கை 1.9 கோடியாகவே இருந்தது.
இந்த நிலையில், தற்போது நகர்ப்புறப் பகுதிகளில் பிராட்பேண்ட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதால் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், ஊரடங்கு தொடங்கிய மார்ச் 25ஆம் தேதி முதல் தற்போது வரை டேட்டா பயன்பாடு 25}30 சதவீதம் வரை அதிரித்துள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரையில் பிராட்பேண்ட் பயன்பாடு 6 சதவீதம் மட்டுமே. சீனாவில் இது 55 சதவீதமாகவும், ஐரோப்பிய பிராந்தியத்தில் 70 சதவீதமாகவும், ஜப்பானில் 80 சதவீதமாகவும் உள்ளது என என ஆய்வறிக்கையில் கிரிசில் தெரிவித்துள்ளது.
துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!

No comments:
Post a Comment
Please Comment