மே மாதம் நடைபெறவிருந்த மே மாதம் நடைபெறவிருந்த பள்ளி மாணவர்களுக்கான ‘இளம் விஞ்ஞானி’ திட்டப்பயிற்சி முகாம் ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ‘யுவிகா’ என்ற ‘இளம் விஞ்ஞானி’ திட் டத்தைக் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு விஞ்ஞானி களுடன் கலந்துரையாடல் மற்றும் செய்முறை விளக்கப் பயிற்சிகள் அளிக்கப்படும்.
இதற்காக நாடுமுழுவதும் ஒவ் வொரு மாநிலத்தில் இருந்தும் 3 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி நடப்பு ஆண்டு ‘யுவிகா’ பயிற்சி இஸ்ரோவின் 4 மையங்களிலும் மே 11 முதல் 22-ம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பயிற்சி முகாமில் பங்கேற்க மொத்தம் 1.52 லட்சம் பள்ளி மாணவர்கள் விண்ணப் பித்தனர். முதல்கட்டமாக 368 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் இருந்து தகுதியான 113 மாண வர்களை யுவிகா பயிற்சிக்குத் தேர்வு செய்யும் பணியில் இஸ்ரோ குழு ஈடுபட்டிருந்தது. இதற்கிடையே கரோனா வைரஸ் பரவலால் நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் யுவிகா சார்ந்த பணிகளை திட்ட மிட்ட காலக்கெடுவுக்குள் முடிப்ப தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மறுதேதி பின்னர் அறிவிப்பு
இதன்காரணமாக நடப்பு ஆண்டு மே 11-ல் தொடங்க இருந்த யுவிகா பயிற்சி முகாம் தற்காலிக மாக ஒத்திவைக்கப்படுவதுடன், மறுதேதி விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. இதுதொடர்பான கூடுதல் தகவல்களை www.isro.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் 080 - 2217 2269 என்ற தொலைபேசி எண் அல்லது yuvika2020@isro.gov.in மின்னஞ்சல் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.இஸ்ரோவின் ‘இளம் விஞ்ஞானி’ திட்டப்பயிற்சி முகாம் ஒத்திவைப்பு
துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம். மேலும் கல்விச் செய்திகளை உங்கள் WhatsApp குழுவில் பெற 9629345493 என்ற எண்ணை இணைக்கவும். மிக்க நன்றி , நட்பில் இணைந்திருங்கள்.

No comments:
Post a Comment
Please Comment