ஐ.டி. ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஐ.டி. ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம்

ஐ.டி. ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அறிவுறுத்தல் 


சென்னை மின் ஆளுமை முகமை அலுவலகத்தில் தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங் களின் உயர் அலுவலர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறைச் செயலருடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று ஆலோசனை நடத்தினார். 

 கூட்டத்தில் அமைச்சர் பேசிய தாவது: 

தமிழகத்தில் கட்டுப்பாடு களைத் தளர்த்துவது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு அளித்த முதல் கட்ட ஆலோசனைகள் முதல்வர் தலைமையில் ஏப்.20-ல் நடை பெற்ற கூட்டத்தில் கவனமாக ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி, வைரஸ் பரவு வதைத் தடுக்க தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதரக் கட்டுப்பாடுகளைத் தொடர்வது என தமிழக அரசால் முடிவெடுக் கப்பட்டது. 

எனவே, தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங் கள் மற்றும் அதன் ஊழியர்கள் மே 3-ம் தேதி வரை ஊரடங்கைக் கடைப் பிடிக்க வீட்டிலிருந்தே பணியாற்ற வேண் டும். இவ்வாறு அவர் பேசினார். 

துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம். மேலும் கல்விச் செய்திகளை உங்கள் WhatsApp குழுவில் பெற 9629345493 என்ற எண்ணை இணைக்கவும். மிக்க நன்றி , நட்பில் இணைந்திருங்கள்.

No comments:

Post a Comment

Please Comment