தினம் ஒரு தகவல் ‘செல்பி’ பற்றிய ஆய்வு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தினம் ஒரு தகவல் ‘செல்பி’ பற்றிய ஆய்வு

தினம் ஒரு தகவல் ‘செல்பி’ பற்றிய ஆய்வு 



  செல்போன்கள் மூலம் எடுக்கப்படும் ‘செல்பி’ படங்கள் நம் அன்றாட வாழ்வின் பிரிக்க முடியாத ஓர் அங்கமாகிவிட்டது. எந்த ஒரு கொண்டாட்டமாக இருந்தாலும் அதை செல்பிக்கள் இல்லாமல் யாரும் இப்போது கொண்டாடுவது இல்லை. சந்தோஷமாக இருந்தாலும் செல்பி, சோகமாக இருந்தாலும் செல்பி, குழப்பத்தில் இருந்தாலும் செல்பி, சிரித்தாலும் செல்பி, அழுதாலும் செல்பி என செல் முழுக்க நம் செல்பிக்களால் நிரம்பி வழிகிறது. ஆனால், இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டிருக்கும் செல்பி பற்றிய ஆய்வு முடிவுகள் நம்முடைய செல்பி பழக்கத்தை பரிசீலிக்க சொல்கிறது. 



  சமூக வலைத்தளங்களில் அதிகமாக செல்பி பகிர்பவர்களுக்கு நெருங்கிய உறவுகளிடம் இருந்து பிரச்சினை வருவதாக அந்த ஆய்வு சொல்கிறது. பேஸ்புக்கில் (முகநூல்) அதிகமான லைக்குகளை அள்ளும் செல்பிக்களால் நிஜ வாழ்க்கை உறவுகள் பாதிக்கப்படுவதாகவும் முடிவுகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து செல்பி பகிர்பவர்களைச் சுற்றி இருப்பவர்களால் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை, என்கிறார் பர்மிங்கம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் டேவிட் ஹாப்டன். 

  எந்த அளவுக்கு அதிகமாக செல்பிக்கள் பகிரப்படுகின்றனவோ, அந்த அளவுக்கு சுற்றி இருப்பவர்களின் ஆதரவை அது குறைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர். நாம் நம் நண்பர்களுக்காக பேஸ்புக்கில் பகிரும் படங்கள் பல தரப்பினரை சென்றடைகின்றன என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதனால் உங்கள் பேஸ்புக்கில் இருக்கும் பல்வேறு குரூப்பில் இருப்பவர்களுடன் அந்த படங்கள் பகிரப்படுகின்றன என்பதை மறந்துவிட கூடாது என்கிறார் ஹாப்டன். 



  அதே மாதிரி, குடும்பத்தினருடன் இருக்கும் செல்பிக்களைவிட நண்பர்களுடன் இருக்கும் செல்பிக்கள் அதிகமாக பகிரப்படும்போது, அது தம்பதிகளின் உறவை அதிக அளவில் பாதிக்கிறது. இளம்பெண்களின் செல்பிக்களுக்கு பேஸ்புக்கில் கிடைக்கும் வரவேற்பு, ஆண்களுக்கும், மற்ற வயதினருக்கும் கிடைப்பதில்லை என்றும் அந்த ஆய்வு முடிவு சொல்கிறது. துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment