‘யுனைடெட் ஹியூமன்’ முயற்சிக்கு வலைதளங்களில் வரவேற்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

‘யுனைடெட் ஹியூமன்’ முயற்சிக்கு வலைதளங்களில் வரவேற்பு

வேற்றுமைகளை மறந்து ஒன்றுபடுவோம்’ ‘யுனைடெட் ஹியூமன்’ முயற்சிக்கு வலைதளங்களில் வரவேற்பு 


 ஜாதி, மத வேற்றுமைகளை மறந்து மனித இனமாக ஒன்றிணைவோம் என்று வலியுறுத்தும் ‘யுனைடெட் ஹியூமன்’ ஹேஷ்டேக், வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது. முகநூல், இன்ஸ்டாகிராமில் ‘யுனைடெட் ஹியூமன்‘ (#unitedhuman) என்ற இயக் கத்தை சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் அருண் கார்த்திக் தொடங்கியுள்ளார். 



விளம்பர நோக் கம் இல்லாமல் முழுக்க கரோனா விழிப்புணர்வை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது. கரோனா தொடர்பாக தற் போது அதிக அளவில் தகவல் கள் வலம் வரும் சூழலில், ஆன்லை ன் மூலமாக மக்களிடம் தன்னம் பிக்கை ஏற்படுத்தி, ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த தளம் டிரெண்டாகி வருகிறது. ‘ஜாதி, மத வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்ட மனித இனமாக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். 

ஒற்றுமையே வலிமை. அதுவே நம் பாரம்பரிய பெருமை. அந்த வலிமையை ஆயுதமாக்கி, இயற்கையோடு இணைந்து ஆரோக்கியமான, சந்தோஷமான வாழ்வை வாழ்வோம். விலகி இருப்போம். வீட்டில் இருப்போம். பாதுகாப்பாய் இருப்போம். 



நாளைய தலைமுறைகளுக்கு எடுத்துக்காட்டாக இருப்போம். வழிகாட்டுதல் தேவைப்படுகிற, நமது அனுபவம் மற்றவர்களுக்கு பயன்படும் என்று கருதுகிற அனைவரும் இந்த தளத்தில் இணையலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment