எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. முதல்கட்ட வெற்றி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. முதல்கட்ட வெற்றி

கரோனாவுக்கு தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. முதல்கட்ட வெற்றி 


 கரோனாவுக்கு தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. முதல்கட்ட வெற்றி தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத் துவப் பல்கலைக்கழகம் கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்கும் ஆராய்ச்சியில் முதல் கட்ட வெற்றியைப் பெற்றுள்ளது. 


 உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், கரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப் பதில் முதல்கட்ட ஆராய்ச்சியில் தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தினர் வெற்றி யைப் பெற்றுள்ளனர். வைரஸின் மரபணு தொடரை மட்டும் எடுத்து ரிவர்ஸ் வேக்ஸினாலஜி என்ற முறையில் மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

 இதுதொடர்பாக பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் கூறும்போது, “கரோனா வைரஸின் மரபணு தொடரை வைத்து ரிவர்ஸ் வேக்ஸி னாலஜி முறையில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கலாம். அந்த முறை யில்தான் எங்களது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் முதல்கட்ட வெற்றி கிடைத்துள் ளது. முதல்கட்ட ஆராய்ச்சியில் 70 சதவீதம் பலன் கிடைத்துள்ளது. 


இன்னும் அடுத்தடுத்தக் கட்டங் களுக்கு ஆராய்ச்சி செல்ல வேண்டி யுள்ளது. அமெரிக்காவின் தடுப்பு மருந்து நிறுவனத்தோடு இணைந்து ஆய்வுகளை மேற் கொள்ள இருக்கிறோம்” என்றார்.
துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment