இனி ரயிலில் பயணிக்க புதிய கட்டுப்பாடுகள்! என்னென்ன தெரியுமா?
ஊரடங்கு முடிந்து ரயில் சேவைகள் தொடங்கும்போது பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பயணிகள் ரயிலில் ஏறும் முன் பரிசோதிக்கப்படுவார்கள் என்றும் எனவே அவர்கள் ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பே ரயில் நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் குளிர்சாதன பெட்டிகளில் வைரஸ் பரவல் வாய்ப்பு அதிகம் உள்ளதால் அவ்வகை பெட்டிகளின் இயக்கம் சிறிது காலத்திற்கு நிறுத்திவைக்கப்படலாம் என்றும் தெரிகிறது. மேலும் தனி நபர் இடைவெளியை உறுதிப்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு பெட்டியிலும் குறைவான பயணிகளே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிகிறது.
ரயில் பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் முக கவசம் அளிக் கப்படும் எனவும் தெரிகிறது. மேலும் முக்கிய ஊர்களுக்கு இடையே இடை நிறுத்தங்கள் இன்றி ரயில்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் ஊரடங்கிற்கு பிந்தைய கட்டுப்பாடுகள் குறித்து தாங்கள் கள் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
Please Comment