வீட்டு பொருட்களில் விளையாட்டு: அறிவியல் கழகம் ஆலோசனை
உடுமலை:வீட்டில் இருக்கும் பொருட்கள் மூலம், அறிவியல் சார் விளையாட்டுகளை செய்து பார்க்க, கலிலியோ அறிவியல் கழகம் ஆலோசனை வழங்கியுள்ளது.'கொரோனா' வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், பல வீடுகளிலும் குழந்தைகளை சமாளிக்க முடியாமல் பெற்றோர் திணறி வருகின்றனர்.
மொபைல் போன் மற்றும் 'டிவி'யின் முன்பு குழந்தைகள் அடிமைகளாகி விடக்கூடாது என்ற நோக்கத்தில், உடுமலையில் கலிலியோ அறிவியல் கழகம் மூலம் சில அறிவியல் விளையாட்டுகளை குழந்தைகளுக்கு கற்றுத்தர ஆலோசனை வழங்கியுள்ளனர்.கோடை காலமாக இருப்பதால், தற்போது சூரிய ஒளியை பயன்படுத்தி பகல்நேர வானியல் என்ற தலைப்புகளில் சிறிய அறிவியல் விளையாட்டுகளை கூறியுள்ளனர்.அறிவியல் கழகத்தினர் கூறியதாவது:
வீட்டிலுள்ள பொருட்கள் மூலம் சிறிய அறிவியல் விளையாட்டுக்களை செயல்படுத்தலாம். முகம் பார்க்கும் கண்ணாடியை சூரிய ஒளி படும் வகையில் வைத்து, அதன் ஒளியை, இருளான இடத்தில் படும் வகையில் வைக்க வேண்டும்.சூரியனின் பிம்பம் நகர்வை வைத்து, பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை குழந்தைகளுக்கு விளக்கலாம்.
சூரியனுடைய கரும்புள்ளிகளையும் இதன் மூலம் காண முடியும்.செயற்கை வானவில், சூரியன் உதிக்கும், மறையும் நேரம் வேறுபாடு, சூரிய அட்டை, என்ற தலைப்புகளில் பல நிகழ்வுகளை, குழந்தைகளுக்கு செய்து காட்டலாம்.இவ்வாறு, கூறினர்.சிறிய அறிவியல் விளையாட்டுகள் குறித்து அறிந்து கொள்ளவும், குழந்தைகளுக்கு ஆலோசனை கேட்கவும், 8778201926 என்ற எண்ணில் அறிவியல் கழகத்தை தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment
Please Comment