வீட்டில் இருந்தபடியே இணையம் மூலம் மாணவருக்கு பாடமெடுக்கும் ஆசிரியர்கள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வீட்டில் இருந்தபடியே இணையம் மூலம் மாணவருக்கு பாடமெடுக்கும் ஆசிரியர்கள்

வீட்டில் இருந்தபடியே இணையம் மூலம் மாணவருக்கு பாடமெடுக்கும் ஆசிரியர்கள் 


கரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கிய பள்ளி மாணவர்களுக்கு இணையம் மூலம் பாடமெடுக்கும் திட்டத்தை, மதுரையில் தனியார் பள்ளிகள் செயல்படுத்தி வரு கின்றன. திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடப்புக் கல்வியாண்டில் 2-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து பாடங்களையும் ‘ஜூம் ஆப்’ என்ற பிரத்யேகச் செயலி மூலம் மாணவர்களின் பெற்றோர்களின் ஸ்மார்ட் போன்களில் இணைப்பை ஏற்படுத்தி, அதன் வழியாக ஆசிரியர்கள் தினமும் பாடம் நடத்துகின்றனர். 

இதேபோன்று, மதுரை டிவிஎஸ் லட்சுமி மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட சில தனியார் பள்ளி நிர்வாகங்களின் அறிவுரையின்படி அந்தந்த பாட வகுப்பு ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்களின் செல்போன்களில் வாட்ஸ் ஆப் குரூப் ஏற்படுத்தி, அதன் மூலம் வீட்டுப் பாடங்களை அளிக் கின்றனர். 

ஊரடங்கால் செல்போன், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மாணவர்கள் மூழ்கிவிடாமல் தடுக்க, இணையம் மூலம் பாடங் களை போதிக்கும் திட்டம் பெற் றோர்களிடம் வரவேற்பை பெற்றுள் ளதாக ஆசிரியர்கள் தெரிவிக் கின்றனர்.

SOURCE THE HINDU TAMIL THISAI (11/04/2020)


No comments:

Post a Comment

Please Comment