ஜே.இ.இ. முதன்மை தேர்வு: தேர்வு மையங்களை மாற்ற மாணவர்களுக்கு வாய்ப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஜே.இ.இ. முதன்மை தேர்வு: தேர்வு மையங்களை மாற்ற மாணவர்களுக்கு வாய்ப்பு

ஜே.இ.இ. முதன்மை தேர்வு: தேர்வு மையங்களை மாற்ற மாணவர்களுக்கு வாய்ப்பு 14-ந் தேதி கடைசி 




நாள் ஒருங்கிணைந்த பொறியியல் நுழைவுத் தேர்வான ஜே.இ.இ. முதன்மை தேர்வு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக இந்த தேர்வுகள் மே மாதத்தின் கடைசி வாரத்தில் நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 

இந்த நிலையில் தேர்வுக்காக விண்ணப்பித்த மாணவர்கள் ஆன்லைன் விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு தேர்வு முகமை அனுமதித்து உள்ளது. இதன்படி வருகிற 14-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்களில் மாணவர்கள் திருத்தங்களை மேற்கொள்ளலாம். வைரஸ் தொற்று காரணமாக மாணவர்கள் தற்போது இடம் மாறி இருக்கக் கூடும். 


அதைப்போல தேர்வு மையங்களுக்கு சென்று வருவதிலும் சிரமங்கள் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு தேர்வு மையங்களை மாற்றி அமைப்பதற்காக இந்த திருத்தம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. 

இருப்பினும் விண்ணப்பத்தில் வேறு சில திருத்தங்களையும் மேற்கொள்ளலாம். இந்த திருத்தங்கள் 14-ந் தேதி மாலை 5 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், கட்டணம் செலுத்துவதாக இருந்தால் இரவு 11.50 மணி வரை செலுத்தலாம் என்றும் தேர்வு முகமை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Please Comment