சென்னை பல்கலைக்கழக புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான பணிகள் ஆன்லைன் மூலம் நடத்த முடிவு தேடுதல் குழு தீவிரம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சென்னை பல்கலைக்கழக புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான பணிகள் ஆன்லைன் மூலம் நடத்த முடிவு தேடுதல் குழு தீவிரம்

சென்னை பல்கலைக்கழக புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான பணிகள் ஆன்லைன் மூலம் நடத்த முடிவு தேடுதல் குழு தீவிரம் 

 சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக இருக்கும் துரைசாமியின் பதவிகாலம் அடுத்த மாதம் (மே) 26-ந்தேதியுடன் முடிவடைய இருக்கிறது. இதற்காக புதிய துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவை பல்கலைக்கழகங்களின் வேந்தரும், கவர்னருமான பன்வாரிலால் புரோகித் சமீபத்தில் அமைத்தார். 

 இந்த குழுவின் தலைவராக டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ்குமாரும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மருதமுத்து, அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராமசாமி ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர். 

ஆனால் ஊரடங்கு அமலுக்கு வந்ததால், தேடுதல் குழுவின் பணிகள் கிடப்பில் இருக்கின்றன. எனவே புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் பணிகளை ஆன்லைன் மூலம் நடத்த முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment

Please Comment