வீட்டில் WiFi வேகம் குறைவாக உள்ளதா? - கூகுள் கூறும் யோசனைகளை பின்பற்றிப்பாருங்கள்!
வீட்டில் இணைய வேகம் குறைவாக இருந்தால், அதனை சரிசெய்வதற்காக கூகுள் சில யோசனைகளை கூறியுள்ளது.
முழு ஊரடங்கு காரணமாக பெரும்பாலான மக்கள் வீட்டிலிருந்தே வேலை பார்க்கின்றனர். அவ்வாறு வீட்டிலிருந்தே வேலை பார்ப்பவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது Wifi சரியாக வேலை செய்யாமல் இருப்பது. அதனை சரிசெய்வதற்காக சில யோசனைகளை கூறியுள்ளது கூகுள் நிறுவனம்.
வீட்டின் நடுவே உங்கள் Router-ஐ வைத்துவிடுங்கள்:
Routerக்கு மிக அருகில் இருப்பவர்களுக்கு வைஃபை வேகமாக இருக்கும். சிலர், வீட்டு வாசலில் Router-ஐ வைத்துவிடுகின்றனர். அவர்கள் அறைக்குள் இருந்து வீடியோ கால் மூலம் பேசும்போது நெட்வொர்க் சரியாக இல்லாமல் பிரச்சனை ஏற்படலாம். இதனால், வீட்டிற்கு நடுவில் Router-ஐ வைப்பதே சிறந்தது என கூகுள் கூறுகின்றது.
புதிய Router-ஐ பயன்படுத்துங்கள்:
பழைய வெர்சன் Router-ஐ பயன்படுத்தினால், வேகம் குறைவாக இருக்கும் எனவும் புதிய வெர்சன் Router-ஐ பயன்படுத்தினால் மட்டுமே அதன் வேகம் அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் குழு பரிந்துரைக்கிறது. உங்கள் வைஃபை பாஸ்வார்டை ரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள்:
பல மக்கள் ஒரே சமயத்தில் வைஃபை பயன்படுத்தினால் அதன் வேகம் குறைவாக இருக்கும். அதனால், உங்களது பாஸ்வார்டை ரகசியமாக வைத்துக்கொள்வதன் மூலம் நீங்கள் மட்டுமே உங்களது வைஃபை-ஐ பயன்படுத்த முடியும். அதனால் வைஃபையின் வேகம் நன்றாக இருக்கும் என்று கூகுள் தரப்பு கூறுகிறது.
விருந்தினர்களுக்கு தனி வைஃபை வைத்துக் கொள்ளுங்கள்:
உங்கள் வீட்டில் உள்ள மற்றவர்கள் பயன்படுத்துவதற்காக அவர்களுக்கான தனி வைஃபை வசதி செய்துகொடுப்பதன் மூலம் நீங்கள் பயன்படுத்தும்போது இடையூறு ஏற்படாமல் இருக்கும் என கூகுள் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
Please Comment