10-ம் வகுப்பு பொதுத்தேர்வு - ஜூன் மூன்றாவது வாரம் அட்டவணை வெளியிடப்படும் (முழ விவரம்)
கரோனா பாதிப்பு குறைந்தபிறகு, ஜூன் மூன்றாவது வாரம் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு அம்மா உணவகத்துக் குத் தேவையான அரிசி மூட்டை களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் நேற்று வழங் கினார். அப்போது, அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் 70 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 69 பேர் குணமடைந் துள்ளனர்.
ஒருவர் உயிரிழந்துள்ளர். ஈரோடு மாவட்டத்தில் கடந்த 21 நாட்களாக புதிதாக யாருக்கும் கரோனா தொற்று இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் அம்மா உணவகங்களில் மே 17-ம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும்.கரோனா அச்சுறுத்தல் முடிந்த பின்னர், முதல்வர் அனுமதி பெற்று, ஜூன் மூன்றாவது வாரம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த அட்டவணை வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


No comments:
Post a Comment
Please Comment