ஜூலை 26-ம் தேதி நீட் தேர்வு - முழ விவரம்
நீட் மற்றும் ஜெஇஇ நுழைவுத் தேர்வுகள் ஜூலை மாதத்தில் நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
கரோனா ஊரடங்கால் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப் பட்டுள்ளன. இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வீடியோ கான்பரன்சிங் மூலம் மாணவர்களுடன் நேற்று கலந்து ரையாடினார்.
அப்போது மருத்து படிப்புக் கான நீட் நுழைவுத் தேர்வு, ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி மாணவர் சேர்க்கைக்கான ஜெஇஇ மெயின் மற்றும் ஜெஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வுகள் தொடர்பாக அமைச்சரிடம் மாணவர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதிலளிக்கும்போது,
“ஜெஇஇ மெயின் நுழைவுத் தேர்வு ஜூலை 18 முதல் 20-ம் தேதி வரை யும், நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 26-ம் தேதியும் நடத்தப்படும். அதே போல், ஜெஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் மாதத் தில் நடைபெறும். தேர்வு நாள் பின் னர் அறிவிக்கப்படும்” என்றார்.
ஊரடங்கால் சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புகளில் 29 பாடங்களுக் கான தேர்வுகள் தள்ளிவைக்கப் பட்டன. நிலுவையில் உள்ள பாடங்களுக்கான தேர்வுகளை ஜூலை முதல் இரண்டு வாரங் களில் நடத்தி முடிக்க சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

No comments:
Post a Comment
Please Comment