வைரஸ் தொற்று அதிகம் உள்ள சிவப்பு மண்டலத்தில் 10-ம் வகுப்பு தேர்வு எப்படி நடத்தப்படும்? ஐகோர்ட்டு கேள்வி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வைரஸ் தொற்று அதிகம் உள்ள சிவப்பு மண்டலத்தில் 10-ம் வகுப்பு தேர்வு எப்படி நடத்தப்படும்? ஐகோர்ட்டு கேள்வி

வைரஸ் தொற்று அதிகம் உள்ள சிவப்பு மண்டலத்தில் 10-ம் வகுப்பு தேர்வு எப்படி நடத்தப்படும்? ஐகோர்ட்டு கேள்வி 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற ஜூன் 15-ந்தேதி தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை எதிர்த்து ஏற்கனவே சிலர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். 


இந்த நிலையில், இந்திய மாணவர்கள் சங்கமும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தற்போது நடத்தக்கூடாது என்று வழக்கு தொடர்ந்துள்ளது. 

அதில், ‘மத்திய அரசு சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வை ஜூலை மாதம் தான் நடத்த உள்ளது. ஆனால் தமிழக அரசு மட்டும் அவசர கதியில் 10-ம் வகுப்பு தேர்வை ஜூன் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பி.டி.ஆஷா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு பிளடர் சி.முனுசாமி ஆஜரானார். 

 அவரிடம் நீதிபதிகள், ‘கொரோனா வைரஸ் தொற்று அதிகம் உள்ள சிவப்பு மண்டலங்களில் பொதுத்தேர்வை எப்படி நடத்த உள்ளர்கள்?’ என்று கேள்வி எழுப்பினர். பின்னர், ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகளுடன் இந்த வழக்கும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறி நீதிபதிகள், இந்த வழக்கிற்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

Please Comment