மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு ஆணையம் இம்மாத இறுதிக்குள் அறிக்கை தாக்கல் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு ஆணையம் இம்மாத இறுதிக்குள் அறிக்கை தாக்கல்

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு ஆணையம் இம்மாத இறுதிக்குள் அறிக்கை தாக்கல் 

சென்னை, மே.22- 

மருத்துவபடிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பிரத்தியேக உள்ஒதுக்கீடு வழங்க அரசு முடிவு செய்து இருந்தது. இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தது. 

இந்தநிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி பொன்.கலையரசன் தலைமையில், சுகாதாரம், பள்ளிக்கல்வி, சட்டத்துறைகளின் செயலாளர்கள், திருவள்ளூர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஜோதிமுருகன், கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனையின் தலைவர் நல்லா ஜி.பழனிசாமி ஆகியோர் உறுப்பினர்களாகவும், மருத்துவ கல்வி இயக்குனர் உறுப்பினர்-செயலாளராகவும் கொண்ட ஆணையம் அமைக்கப்பட்டது. 

இந்த ஆணையம் ஆய்வு மேற்கொண்டு சில முக்கிய முடிவுகளை எடுத்து இருக்கிறது. மேலும் மருத்துவபடிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு எவ்வளவு சதவீதம்? என்பது குறித்து ஆணையம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. 


 உள் ஒதுக்கீடு குறித்த முழு அறிக்கையை அரசிடம் ஆணையம் இம்மாத இறுதிக்குள் தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

No comments:

Post a Comment

Please Comment