11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் மையங்கள் 203 ஆக அதிகரிப்பு
11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் மையங்கள் 203 ஆக அதிகரிப்பு
சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை தொடங்குகிறது
பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காக மையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்தும் மையங்களின் எண்ணிக்கை 67ல் இருந்து 202 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத் தாள் திருத்தும் பணி நாளை தொடங்க உள்ளது.
இந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் மையங்கள் 67ல் இருந்து 202 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதில், நாளை முதல் 10,746 தலைமை மதிப்பீட்டாளர்கள் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபடுவார்கள்.
நாளை மறுநாள் முதல் 32,235 ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்.
தனிமனித இடைவெளியுடன் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற வேண்டும் என்றால், ஒரு அறையில் 8 பேர் மட்டுமே அமர வேண்டும் என்பதால், மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு சுமார் 1.20 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்பட உள்ளன.
No comments:
Post a Comment
Please Comment